மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரியாகும் கமலின் முன்னாள் மனைவி..இந்த வயதிலும் நடிக்க வறுமைதான் காரணமா?
மும்பை : நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா பாலிவுட்டில் மீண்டும் என்ட்ரியாக உள்ளார்.
நடிகர் கமல் ஹாசனும், சரிகாவும் 1988 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சரிகா மகள்கள் மற்றும் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் கவனித்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு காஸ்ட்யூம் டிசைனராக திரைக்கு பின்னால் இருந்தார்.
இதையடுத்து கடந்த 2004ம் ஆண்டு சரிகா கமலஹாசனை பிரிந்தார். விவாகரத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த அவர், பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். கடைசியாக 2016ம் ஆண்டு வெளியான பார் பார் தேகோ படத்தில் நடித்திருந்தார்.

நடிகை சரிகா
நடிகை சரிகா கமல்ஹாசனை விட்டு பிரிந்த பிறகும மும்பை ஜுஹு பகுதியில் தனது அம்மா வீட்டில் இருந்தார். ஆனால், அவரது அம்மா இறந்த பிறகு அபார்ட்மென்ட் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் யாரோ ஒரு குடும்ப நண்பரான டாக்டர் விக்ரம் தாக்கர் பொய்யான உயில் எழுதி அபகரித்துக்கொண்டார். இதையடுத்து, கோர்ட் கேஸ் என சரிகா அலைந்து வந்தார்.

சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட சரிகா
பட வாய்ப்பு இல்லாததால், நாடகங்களில் நடித்து வருவதாகவும், இதில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை சம்பாதித்து தனது தேவைகளை பார்த்துக்கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சரிகா கூறியிருந்தார், லக் டவுன் நேரத்தில் நாடகமும் இல்லாததால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாக ஒரு பேட்டியில் சரிகா கூறியிருந்தார்.

My Beautiful Wrinkles
இதையடுத்து சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான மாடர்ன் லவ் மும்பை (Modern Love: Mumbai) என்ற ஆந்தாலஜி படத்தில் My Beautiful Wrinkles எனும் குறும்படத்தில் நடித்திருந்தார் சரிகா. 25 வயது இளைஞன் மீது காதல் வரும் ஒரு விவகாரமான கதையில் நடித்து சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார் சரிகா.

மீண்டும் பாலிவுட்டில்
இந்நிலையில், நடிகை சரிகா தற்போது UUNCHAI என்ற ஹிந்தி படத்தில் மீண்டும் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 11ந் தேதி வெளியாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் சரிகா தனியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார். கணவன், மகள் என அனைவருமே உச்சத்தில் இருக்கும் போது சரிகா வருமானத்திற்காக இந்த வயதிலும் நடித்து சம்பாதிப்பது பலரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications