Saritha: கமலோட நடிக்கறதுக்காக டைரக்டர் யாருன்னு கூட கேட்காம ஓகே சொன்னேன்.. சரிதா க்யூட்!

சென்னை: நடிகை சரிதா 80களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கமல், ரஜினி, பாக்கியராஜ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர்.

ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கிய சரிதா, டப்பிங் பணிகளில் தன்னை சிறப்பாக இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார்.

Actress Saritha opens up about Marocharitra movie with Kamal haasan

கமலுடன் இணைந்து நடித்த மரோசரித்ரா நினைவுகளை பகிர்ந்த சரிதா: நடிகை சரிதா 80களின் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர். ரஜினி, கமல், பாக்கியராஜ் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர். அதிகமான கவர்ச்சியை காட்டாமல் ஹோம்லி கேரக்டர்களில் சிறந்த நடிப்பை கொடுத்தவர். தப்புத்தாளங்கள் என்ற படத்தின்மூலம் அறிமுகமான சரிதா, பல முன்னணி படங்களில் நடித்து அதிகமான ஹிட் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கிய சரிதா, வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

பல ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்துள்ள சரிதா, தமிழில் மீண்டும் தன்னுடைய ரீ என்ட்ரியை கொடுத்துள்ளார். தன்னுடைய மாவீரன் படத்தின்மூலம் மீண்டும் சரிதாவை நடிக்க வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாவீரன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் சரிதா. சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரிதா, ரஜினியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதேபோன்ற குணாதிசயங்களை தற்போது சிவகார்த்திகேயனிடமும் பார்ப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதனால் தான் படப்பிடிப்பின்போது, சிவகார்த்திகேயனை குட்டி ரஜினி என்றுதான் அழைப்பேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், கமலுடன் தான் நடித்த மரோசரித்ரா படம் குறித்த அனுபவங்களை தனது சமீபத்திய பேட்டியில் சரிதா பகிர்ந்துக் கெண்டுள்ளார். மரோசரித்ரா படத்தில் கமலுடன் இணைந்து நடிப்பதற்காக, தான் படத்தை எந்த இயக்குநர் இயக்குகிறார், தயாரிப்பாளர் யார் என்றுகூட கேட்காமல் உடனடியாக ஓகே செய்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த அளவிற்கு கமலுடன் இணைந்து நடிக்க தான் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் சரிதா குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்காக எடுக்கப்பட்ட ஆடிஷனில் 162வது பெண்ணாக தான் பங்கேற்று, செலக்ட் ஆனதாகவும் கூறியுள்ளார். கமலுடன் அதிகமான படங்களில் தான் இணைந்து நடித்ததாகவும், தப்புத்தாளங்கள், கல்யாண அகதிகள் என்று அடுத்தடுத்த படங்களில் தான் நடித்துள்ளதாகவும் சரிதா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

கமல் -சரிதா நடிப்பில் வெளியான மரோசரித்ரா படத்தை இயக்குநர் கே பாலசந்தர் இயக்கியிருந்தார். படத்திற்கு எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். தெலுங்கில் வெளியான இந்தப் படம் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போது தனக்கு எதுவும் தெரியாது என்றும் களிமண்ணாக இருந்த தன்னை நடிகையாக உருவாக்கியது கேபி சார்தான் என்று படத்தின் ரிலீசின் போதே சரிதா கூறியிருந்தார். அழியாத காதல் காவியமாக இந்தப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X