Saritha: லோகேஷ் கனகராஜ் அம்மாவிற்கு பிடித்த நடிகை சரிதா.. அவங்களோட ஆசை என்ன தெரியுமா?

சென்னை: நடிகை சரிதா ரஜினி, பாக்கியராஜ், தியாகராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.

தமிழ் சினிமாவில் கமல், ரஜினிக்கு இணையாக பேசப்பட்டவர் சரிதா. தன்னுடைய கண்களாலேயே பாதி நடித்துவிடுவார். மீதி நடிப்பை அவரது உடல்மொழி பார்த்துக் கொள்ளும்.

சரிதாவிற்கு அவரது குரலும் ஒரு ப்ளஸ்தான். சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒரு காலகட்டத்தில் ஒதுங்கிய சரிதா, பல நடிகைகளுக்கு பின்னணி கொடுத்துள்ளார்.

Actress Saritha shares about her wish in Cinema field

சினிமாவில் நடிகை சரிதாவின் ஆசை: நடிகை சரிதா 1980களில் ஏராளமான ரசிகர்களை தன்னுடைய கண்களாலும் இயல்பான நடிப்பாலும் கட்டிப் போட்டவர். ரஜினி, பாக்கியராஜ், தியாகராஜன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளவர். இவரது கண்கள் மூலமே பாதி நடிப்பை இவர் நடித்து முடித்துவிடுவார். மீதி நடிப்பை தன்னுடைய உடல்மொழி மூலமாகவே நடிப்பார். தமிழ் சினிமாவில் அதிகமான கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகைகளில் சரிதாவிற்கு முக்கியமான பங்குண்டு.

கடந்த 1988ம் ஆண்டில் மலையாள நடிகர் முகேஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் சரிதா. இவர்களுக்கு ஷ்ரவன், தேஜஸ் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஷ்ரவன் மருத்துவராக உள்ளார். முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த சரிதா, ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். ஆனாலும் டப்பிங் மூலம் முன்னணி ஹீரோயின்களுக்கு குரலாக அமைந்தார். இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் சரிதா.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தில் முக்கியமான கேரக்டரில் சரிதா நடித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சரிதா, சிவகார்த்திகேயனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதனால் தான் அந்தப் படத்தில் நடிக்க தான் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனக்கு குட்டி ரஜினியாகவே தெரிந்ததாகவும் தான் அப்படித்தான் அவரை சூட்டிங் ஸ்பாட்டில் அழைத்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சை இயக்குநர் மிஷ்கினும் ஆமோதித்திருந்தார்.

முன்னதாக தனக்கு ரஜினியை பிடிக்கும் என்றும் தற்போது சிவகார்த்திகேயனை மிகவும் பிடித்துள்ளதாகவும் அவரது ஆக்டிங் தன்னை வெகுவாக கவர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாவீரன் படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தில் சரிதாவின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படம் சரிதாவிற்கு சிறப்பான ரீ என்ட்ரியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியொன்றில் சரிதா சினிமாவில் தன்னுடைய ஆசை குறித்து வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படங்கள் மற்றும் அவரது இயக்கம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவரது விக்ரம் படத்தை பார்த்துவிட்டு தான் அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பேசிய லோகேஷ் கனகராஜ், தன்னுடைய அம்மாவிற்கு சரிதாவை மிகவும் பிடிக்கும் என்று கூறியதாகவும் சரிதா தெரிவித்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தான் மிகவும் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X