சரோஜாதேவிக்கு 82 வயசாய்ருச்சு கோப்பால்.. விஷ் பண்ணுங்க கோப்பால் கோப்பால்!
சென்னை : கன்னடத்து பைக்கிளி, அபிநய சரஸ்வதி சரோஜா தேவி இன்று 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சரோஜா தேவி என்றதும் நம் நினைக்கு வருவது அன்பே வா படத்தில் வரும் சிட்டுக்குருவி முத்தம் கொடுக்க பாடல் தான். இன்றளவும் அந்த பாடல் இன்றளவும் நிலைத்து இருக்க அவரின் நடனம் தான் காரணமாக அமைந்துள்ளது. இந்த பாடலை கேட்டாலே ஒரு நிமிடம் சட்டென்று திரும்பி பார்க்கும் வயதானவர்களை நாம் கட்டாயம் பார்த்திருப்போம்.

ஆனால் இந்த நூற்றாண்டு குழந்தைகளுக்கு சரோஜா தேவி என்றவுடன் ஞாபகம் வருவது சூர்யா நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ஆதவன் படம் தான். நாம் அவ்வளவாக சரோஜா தேவியை பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றாலும் சரோஜா தேவி தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம் என்று சொன்னால் அது மிகையாகது. அப்படி நடிப்பில் ஒரு சகாப்ததை உருவாக்கியவரின் பிறந்த நாள் இன்று .
சரோஜாதேவிக்கு பல அடைமொழி பெயர்கள் இருக்கிறது பொதுவாக ஒரு நடிகை அல்லது நடிகருக்கு ஒரு அடை மொழி பெயர் இருக்கும் ஆனால் சரோஜா தேவிக்கு தமிழ் ,தெலுங்கு , கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் அடைமொழி பெயர்கள் உண்டு, அந்த காலங்களில் அவர் அவ்வளவு பெரிய உச்ச நடிகை.
தமிழில் இவருக்கு கன்னடத்து பைங்களி என்ற பெயர் உண்டு ஏனெனில் இவரின் சொந்த ஊர் மைசூர் ஆகும். மேலும் இவருக்கு அபிநய சரஸ்வதி என்ற மற்றொரு பெயரும் தமிழில் உண்டு, தெலுங்கில் இவருக்கு சலபாசுந்தரி எனும் பெயர் உண்டு கன்னடத்தில் அபிநய காஞ்சனா மாலா என்ற பெயர் உண்டு மற்றும் ஹிந்தியில் அபிநய பாரதி என்ற பெயர் உண்டு .
கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவிக்கு 3 அக்காக்கள் மற்றும் 1 தங்கை உண்டு. சிறு வயதில் இருந்து தன் தாத்தாவிடம் நடனம் மற்றும் பாட்டும் கற்று கொண்டு இரண்டிலும் கை தேர்ந்தவரானார். சரோஜாதேவிக்கு பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது அதன் மூலம் மகாகவி காளிதாஸ் எனும் கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார் சரோஜாதேவி. அதன் பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடிப்பில் சரோஜா தொடாத உயரம் இல்லை என்றே கூறலாம். இவரின் நாயகி அவதாரம் முடிந்தும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்தார் சரோஜா தேவி .
சரோஜா தேவி கடைசியாக தமிழில் ஆதவன் படத்தில் நடித்து அசத்தி இருந்தார் அந்த படம் 2009ல் வெளியானது. அதையடுத்து சமீபத்தில் 2019ல் வெளிவந்த கன்னட படமான நடசர்வபோமா படத்தில் ஒரு முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து இருந்தார்.
சரோஜா தேவியின் கலை பயணத்தை பாராட்டி இந்தியாவின் மிக உயரிய விருதுகள் எல்லாம் வழங்கப்பட்டு உள்ளன. அதில் பத்ம ஶ்ரீ மற்றும் பத்ம பூசன் விருதுகள் மிக முக்கியமானதாகும். மேலும் பல வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், டாக்டர் பட்டம் ஆகியவை கொடுக்கபட்டு இருக்கிறது. இந்திய அளவில் பல உயரிய விருதுகள் சரோஜா தேவிக்கு வழங்கபட்டு இருக்கிறது. தற்போது 82 வயதை பூர்த்தி செய்துள்ள சரோஜா தேவி முதுமை காலங்களை தன் உறவுகளுடன் இருந்து வருகிறார் .


Click it and Unblock the Notifications











