என் ஆயுளும் சேர்ந்து எஸ்பிபி நல்லபடியாக மீண்டு வர வேண்டும்.. உருக வைத்த நடிகை சரோஜா தேவி!

சென்னை: நடிகை சரோஜா தேவி தன்னுடைய ஆயுளும் சேர்ந்து பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் நல்லபடியாக மீண்டு வரவேண்டும் என உருக்கமாக கூறியுள்ளார்.

Recommended Video

Surya Devi க்கு தொற்று உறுதி, ஆனால் தலைமறைவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்து வருகிறது.

மருத்துவமனையின் அறிக்கைகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எஸ்பி பாலசுப்ரமணியம் எப்படியாவது மீண்டு வந்து விட வேண்டும் என திரைத்துறையினர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

நேற்று மாலை பிரார்த்தனை

நேற்று மாலை பிரார்த்தனை

நேற்று தமிழகம் முழுவதும் மாஸ் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று மாலை 6 மணி முதல் 6.5 மணி வரை நடைபெற்ற இந்த கூட்டுப் பிரார்த்தனையில் திரையுலகப் பிரபலங்கள் மட்டுமின்றி ஏராளமான ரசிகர்களும் பங்கேற்றனர்.

சரோஜா தேவி

சரோஜா தேவி

எஸ்பிபியின் பாடல்களை ஒலிக்கவிட்டு அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தித்தனர். அப்போது பாடகர் எஸ்பிபிக்காக பிரார்த்தனை செய்த மூத்த நடிகையான சரோஜா தேவி தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

வேதனை அடைந்தேன்

வேதனை அடைந்தேன்

அப்போது எஸ்பிபி குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார் சரோஜா தேவி. பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சரியில்லை என்பதை கேள்விப்பட்டு ரொம்ப வேதனை அடைந்தேன். எஸ்பி பாலசுப்ரமணியம் ரொம்ப நல்ல மனிதர்.

தேன் சாப்பிடுவீங்களா?

தேன் சாப்பிடுவீங்களா?

ஒரு முறை விழா ஒன்றில் அவரை சந்தித்தேன். அப்போது, அவரிம் நீங்கள் தினமும் தேன் சாப்பிடுவீங்களா என்று கேட்டேன். அதற்கு அவர் ஏன் அப்படி கேட்குறீங்க என்றார். நான், உங்கள் குரல் இவ்வளவு இனிமையா இருக்கே என்றேன். உடனே அவர் சிரித்துவிட்டார்.

என் ஆயுளையும் சேர்த்து

என் ஆயுளையும் சேர்த்து

மேலும் நீங்களும்தான் அழகா இருக்கீங்க என்று கூறினார். எஸ்பி பாலசுப்ரமணியம் இப்படி இருப்பதை பார்த்து இந்திய நாடே கவலையில் உள்ளது. என் ஆயுளையும் சேர்த்து அவருக்கு கொடுத்து, கடவுள் அவரை மீட்டு கொடுக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.

ரொம்ப வருஷம் பாடனும்

ரொம்ப வருஷம் பாடனும்

அவர் பூரண குணமடைந்து மீண்டு வர வேண்டும். இன்னும் பல பாடல்களை ரொம்ப வருஷம் பாடனும் என கூறியுள்ளார். நடிகை சரோஜா தேவியின் இந்தப் பேச்சு எஸ்பிபி ரசிகர்களை உருக வைத்துள்ளது. நடிகை சரோஜா தேவி, எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என பல நடிகர்களுடன் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X