கொசு விரட்டியால் தீக்கிரையான பிரபல சீரியல் நடிகை வீடு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை சம்யா டாண்டன் வீடு தீப்பிடித்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பை: கொசுவை விரட்டும் திரவ மெஷினால் சின்னத்திரை நடிகை சம்யா டாண்டன் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாப்ஜி கார் பார் ஹெய்ன் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் நடிகை சம்யா டாண்டன். சமீபத்தில் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

தீவிபத்து

தீவிபத்து

அந்தப் பதிவில் அவர், "நேற்றிரவு தூங்கும்போது கொசுவை விரட்ட பயன்படும் திரவ மெஷினை ஆன் செய்து விட்டு தூங்கினேன். இதனால் தீவிபத்து ஏற்பட்டு விட்டது. இந்த சம்பவத்தால் நான் மூன்று பாடங்களை கற்றுள்ளேன்.

முக்கிய பாடங்கள்:

முக்கிய பாடங்கள்:

அதில் முக்கியமானது கொசு விரட்டியை படுக்கைக்கு அருகில் போட்டு வைக்கக் கூடாது. அடுத்தது அதன் அருகில் வேறு எந்தப் பொருளும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது எப்போதும் வீட்டில் தீயணைப்பு கருவி தயார் நிலையில் இருப்பது நல்லது" எனத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி:

கூடவே, தீக்கிரையான தனது வீட்டின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்துப் பதறிப் போன ரசிகர்கள், ‘இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா?' என அக்கறையாக சம்யாவிடம் விசாரித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை:

முன்னெச்சரிக்கை:

அதற்கு அவர், ‘அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை' எனப் பதிலளித்துள்ளார். ஆனாலும், தனது வீட்டில் நடந்த இந்த சம்பவத்தை நினைவில் கொண்டு அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் ந��ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சம்யாவின் இந்தப் பதிவிற்கான காரணம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X