வீட்டில் விதவித சமையல்.. அசத்தும் சாயிஷா.. உண்டு களிக்கும் ஆர்யா !
சென்னை : வீட்டில் விதவிதமான சமையல் செய்து அசத்துகிறார் சாயிஷா.
இந்த 21 நாள் ஊரடங்கு பல நடிகர் நடிகைகளுக்கு தங்கள் திறமையை வெளிக்கொண்டு வர வழிவகை செய்துள்ளது. இந்த நாளில் வீட்டில் உடற்பயிற்சி செய்வது, ஆடுவது, பாடுவது சமைப்பது என்று பலரும் பலவிதமாக தங்கள் பொழுதை செலவிட்டு வருகின்றனர்.

படப்பிடிப்பு நேரங்களில் கால்களில் சக்கரம் கட்டியது போல் ஓடிக் கொண்டே இருக்கும் நடிகைகளுக்கு இந்த ஊரடங்கு காலம் ஒரு ஓய்வு நேரமாக மாறி இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் தன் திறமைகளை அவர்களே மறந்துவிட்ட நிலையில் இப்போது இந்த விடுமுறை நேரத்தில் தான் அது அவர்களுக்கே நினைவுக்கு வருகிறது.
பல நடிகைகள் தன் கணவருக்கும், தன் குழந்தைகளுக்கும் தங்கள் கைகளால் விதவிதமாக சமைத்து தருகின்றனர். அந்த வகையில் ஆர்யா , சாயிஷா ஜோடி இந்த ஊரடங்கை ஓய்வு நேரமாக நினைக்கின்றனர். சாயிஷா தன் கணவர் ஆர்யாவுக்கு தினமும் ஸ்பெஷல் டிஷ் சமைத்து தருகிறார். முதலில் கப் கேக், சீஸ் கேக் என்று ஆரம்பித்து தற்போது, பிரியாணி சமைக்கும் அளவுக்கு தயாராகி விட்டார் சாயிஷா. பிரியாணி சாப்பிட்ட ஆர்யா அப்படியே அசந்து போய் விட்டு மிகவும் அருமை அருமை என்று கூறியுள்ளார்.

மேலும் , தன் மனைவி சமைத்த டிஷ்களை போட்டோஸ் எடுத்து தன் நண்பர்களுக்கும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ள ஆர்யா. இது என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆர்யா.
இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன்ஸ் பரவாயில்லையே சாயிஷா நல்லா டான்ஸ் மட்டும் தான் ஆடுவாங்கனு நினைச்சோம். சமையலையும் சூப்பரா செஞ்சி அசத்தி இருக்காங்களே, ஆர்யா சார் நீங்க கொடுத்து வைச்சவர்தான் என்று பலரும் நக்கலாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications