கர்ப்பம்னு சொன்னாங்க.. இவங்க இந்த குத்து குத்துறாங்க.. தீயாய் பரவும் நடிகையின் டான்ஸ் வீடியோ!
சென்னை: கர்ப்பம் என்று கூறப்பட்ட நிலையில் பிரபல நடிகை செம ஃபாஸ்ட்டாக குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் நடிகை சாயிஷா. இவர் 2015ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அகில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து இந்தியில் ஷிவாய் என்ற படத்தின் மூலம் அறிமுகனார். பின்னர் ஜெயம் ரவியின் வனமகன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சாயிஷா.

நளினமான நடனம்
அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்தார். ஜுங்கா படத்தில் நடித்த அவர், கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகவும் காப்பான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தார். தனது கொஞ்சும் அழகாலும், நளினமான நடனத்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் சாயிஷா.

கன்னட சினிமா
தற்போது ஆர்யாவுடன் டெடி என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் யுவரத்னா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார் சாயிஷா. இதன் மூலம் கன்னட சினிமாவிலும் அடியெடுத்து வைக்கிறார்.

டான்ஸ் வீடியோ
நடிகை சாயிஷா, கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான ஆர்யாவை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார் சாயிஷா. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா அவ்வப்போது நடனமாடும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

வாய் திறக்கவில்லை
இந்நிலையில் நடிகை சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுகுறித்து நடிகை சாயிஷாவோ அல்லது அவரது கணவரான நடிகர் ஆர்யாவோ வாய் திறக்கவில்லை. சாயிஷாவின் வீடியோக்களை வைத்தே இப்படி கிசுகிசுக்கப்பட்டது.

இப்படி ஆடலாமா?
இந்நிலையில் நடிகை சாயிஷா செம ஆட்டம் போட்ட வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் கறுப்பு நிற உடை அணிந்திருக்கும் சாயிஷா வளைந்து நெளிந்து செம ஃபாஸ்ட் மூவ்மென்ட்ஸ் கொடுத்திருக்கிறார். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கர்ப்பமா இருக்கறதா சொன்னாங்க, இந்த ஆட்டம் ஆடுறீங்களே என கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











