'என் வாழ்நாள் முழுவதும்..' கூர்க்கில் காதல் மனைவியுடன் ஆர்யா.. சாயிஷா போட்ட ரொமான்டிக் போஸ்ட்!

By

சென்னை: நடிகை ஆர்யா, தனது காதல் மனைவியுடன் கர்நாடக மாநிலம் கூர்க்கிற்கு சென்றுள்ளார்.

நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தபோது காதல் கொண்டனர்.

இந்தக் காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டனர்.

ஹாட்ஸ்டாரில் டெடி

ஹாட்ஸ்டாரில் டெடி

இவர்கள் இணைந்து, சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இருந்தாலும் அதில் ஜோடியாக நடிக்கவில்லை. இதையடுத்து டெடி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ள இந்தப் படம், ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்நிலையில் சாயிஷா, கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

யுவரத்னா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கில் உருவாகிறது. நடிகர் ஆர்யா, பா.ரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்கிறார். குத்துச் சண்டையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் கதை, வடசென்னையில் நடந்த உண்மைச் சம்பவம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக உடலை மாற்றி இருக்கிறார் ஆர்யா.

எனிமி வில்லன்

எனிமி வில்லன்

இதையடுத்து விஷால் ஹீரோவாக நடிக்கும் எனிமி படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இவர், விக்ரம் பிரபு நடித்த அரிமாநம்பி, விக்ரம், நயன்தாரா நடித்த இருமுருகன், விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின் நடித்த நோட்டா படங்களை இயக்கியவர். இதில் விஷால் ஜோடியாக, மிருணாளினி ரவி நடிக்கிறார்.

காதல் மனைவி

காதல் மனைவி

இதற்கிடையே ஆர்யா, தனது காதல் மனைவி சாயிஷாவுடன் கர்நாடக மாநிலம் கூர்க்கிற்கு சென்றுள்ளார். அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருக்கும் அவர்கள் ஜாலியாக பொழுதைக் கழித்து வருகின்றனர். வழக்கமாக இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் சாயிஷா, இப்போது ஆர்யாவுடன் அங்கு எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

வாழ்நாள் முழுவதும்

வாழ்நாள் முழுவதும்

இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. போட்டோவுக்கு கேப்ஷனாக, 'நான் என் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் சிரித்துக் கொண்டே கழிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

சரியான ஜோடி

சரியான ஜோடி

பல நெட்டிசன்ஸ், நீங்கள் சரியான ஜோடி என்றும் வாழ்க்கையை நல்லா அனுபவிங்க என்றும் தெரிவித்துள்ளனர். 'அங்க கிளைமேட் எப்பவுமே பிரம்மாதமாக இருக்குமே, இப்ப எப்படியிருக்கு? என்று சிலர் கேட்டுள்ளனர். சிலர், ஆர்யா ப்ரோ, டெடி எப்ப ரிலீஸ் ஆகுது? என்று கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X