ஆர்யாவுக்கே டஃப் கொடுக்கும் சாயிஷா… வெறித்தனமான ஒர்க் அவுட் வீடியோ !

சென்னை : உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சாயிஷா தாறுமாறாக ஒர்க் அவுட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகையாக வலம் வரும் சாயிஷா நடனம், உடற்பயிற்சி என்று சதா எதையாவது ஒன்றை செய்துக்கொண்டே இருக்கிறார்.

இவர் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் நடித்த யுவரத்னா என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

பல ஆண்டுகளாகவே சிங்கிளாக வாழ்ந்து வந்த ஆர்யா, கடந்த 2019ஆம் ஆண்டு சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து காப்பான் திரைப்படத்தில் நடித்தனர். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

குழந்தைகளுக்கு பிடித்தது

அடுத்ததாக சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் உருவான, டெடி திரைப்படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகியோர் இணைந்து நடித்தனர். இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த திரைப்படம் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடித்தமான திரைப்படமாக இருந்தது.

கடுமையான உடற்பயிற்சி

ஆர்யா பா . ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்யாவின் 30வது படமான இந்த படத்திற்காக மிகவும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்துள்ளார்.

Recommended Video

தேன் மாதிரி நிறைய படம் பண்ணனும் | ACTRESS ABARNATHI CHAT | FILMIBEAT TAMIL

ஒர்க் கவுட்

தற்போது சாயிஷாவும் கணவனுக்கு நான் ஒன்றும் இளைத்தவள் இல்லை என்பதை மெய்பிக்கும் வகையில், தாறுமாறாக ஒர்க் அவுட் செய்து வருகிறார். அந்த வீடியோவை பார்த்த நமக்கே தலைசுத்துது அந்த அளவுக்கு ஒர்க் அவுட் செய்கிறார். இரண்டு கைகளையும் தூக்கி அப்படியே எகிறி குதிக்கிறார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் வாயடைந்து போயினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X