Actress Seetha: நடிகை சீதா நிலைமையை பார்த்தீங்களா.. புடலங்காய் பறிச்சா கூட இப்படியா கமெண்ட் வரும்?

சென்னை: நடிகை சீதா.. ஆண் பாவம் திரைப்படம் வெளியாகிய 1985ம் ஆண்டு முதல் இதுவரை தமிழ் ரசிகர்கள் மறக்காத வரலாறு போல மாறிவிட்டது அந்த பெயர். 1967ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பிறந்த நடிகை சீதா வயது 55. முதல் கணவர் பார்த்திபன், இரண்டாவது கணவர் சதீஷ் ஆகியோரை பிரிய நேரிட்டாலும் சீதா இப்போதும் துள்ளி குதிக்கும் சுறுசுறுப்பான பெண்ணாகத்தான் வலம் வருகிறார். அதிலும் சோஷியல் மீடியாக்களில் சீதா படு பிஸி. இளைஞர்களின் ஃபேவரைட்டான இன்ஸ்டாவை கூட விடவில்லை இந்த பழம் பெரும் நடிகை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

யூடியூப், பேஸ்புக்கிலும், இன்ஸ்டாவிலும் எப்போதும் சீதாவை நீங்கள் பார்க்க முடியும். அதிலும், வீட்டு மாடித்தோட்டத்தில் காய்கறி விளைவித்து அதை கத்தரிப்பது இவரது ஹாபி. கணிசமான பாலோவர்கள் இதை பார்த்து தாங்களும் மாடித்தோட்டம் போட்டுள்ளதாக பெருமிதத்தோடு கமெண்ட் செய்தாலும், சிலர் தொடர்ந்து விவகாரமாக கமெண்ட் செய்வது தொடர் கதையாகியுள்ளது.

Actress Seetha gets many comments from fans on Instagram, Youtube

சீதா தனது தோட்டத்தில் புடலங்காய் பறிக்கும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதே போல கத்தரிக்காயை லாவகமாக கட் செய்து எடுக்கும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இன்னொரு வீடியோவில் கருப்பு நிற சேலையில் ஆட்டுக்குட்டியை தோளில் போட்டபடி நிற்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார். புடலங்காய், கத்தரிக்காய் பறிக்கும் வீடியோக்களில் சீதா லெக்கின்ஸ் மாதிரி பேண்ட்டும், டீ சர்ட்டும் போட்டிருந்தார். இந்த 3 வீடியோக்களுக்கும் வந்த கமெண்ட்கள் ஆபாச ரகம்.

சீதா பற்றி கமெண்ட்: மாடி வீட்டு தோட்டத்தை குறிப்பிடுவதை போல சீதாவை குறிவைத்து வன்மத்தோடு கமெண்ட் செய்கிறார்கள் காமுகர்கள். ஆட்டுக்குட்டி வீடியோவில், இடுப்பு பகுதி தெரிவதை கூட நார்மலாக பார்க்க தெரியாமல், வேறு கண்ணோட்டத்தோடு கமெண்ட் செய்து வக்கிரத்தை வெளிப்படுத்துகிறார்கள் சில வக்கிரவாதிகள். ஒரு சிலர் நியாயவான்கள். சீதாவிற்கு அம்மா வயது இருக்கும். இப்படிச் சொல்லலாமா என்று கமெண்ட்டில் கட்டிப்புரண்டு சண்டை போடுவதை பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக யூடியூப்பை விட இன்ஸ்டாவில்தான் ஆபாச கமெண்ட்கள் அதிகம் வருகின்றன.

கொடுமையோ கொடுமை: இன்ஸ்டாவில் பெரும்பாலும் இளம் தலைமுறையினர்தான் வருவதாக ஒரு நம்பிக்கையுள்ளது. ஆனால் கமெண்ட்களை பார்த்தால், இளைஞர்கள் இந்த வேலையை செய்வது போல தெரியவில்லை. எப்படியும் 40 வயதை தாண்டிய கணவான்கள்தான், முகம் காட்ட தேவையில்லாத சமூக வலைத்தள பக்கத்தை இப்படி நாறடித்து வருவதாக தெரிகிறது. வயதில் மூத்த சீதாவுக்கே இந்த கதி என்றால் மற்ற நடிகைகளை பற்றி கேட்கத்தேவையில்லை. எந்த வீடியோ போட்டாலும் ஏதாவது ஒரு கமெண்ட் மட்டரகமாகவே வருகிறது. அதற்கு சிரிப்பு ஸ்மைலி போடவும், ஃபயர் ஸ்மைலி போடவும் 4 பேரும் உள்ளனர்.

Actress Seetha gets many comments from fans on Instagram, Youtube

வாணி போஜன்: சமீபத்தில், நடிகை வாணி போஜன் இதைத்தான் வேதனையோடு சொன்னார். சேலை ஆடையை கூட அட்ஜஸ்ட் செய்ய கூட முடியவில்லை. அதையும் ஜூம் செய்து பார்க்கிறார்கள் என்று வாணி போஜன் ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார். ஆடை சுதந்திரம் பெண்கள் அடிப்படை உரிமை. ஆனால் 55 வயதான சீதாவிற்கு கூட அதை நமது ஆண்கள் தர ரெடியில்லை என்பதைத்தான் இந்த ஆபாச கமெண்ட்கள் நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கின்றன. எப்போது மாறப்போகிறது இந்த அழுக்கு சிந்தனை? எப்போது மதிக்கப்போகிறோம் சக ஜீவன்களான பெண்களை?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X