பார்த்திபனுக்கு மட்டும் தான் அப்படி இருக்குமா... நான் எதிர்பார்க்கக் கூடாதா?: ஓப்பனாக பேசிய சீதா

சென்னை: 1989ம் ஆண்டு வெளியான புதிய பாதை திரைப்படம் முலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்த்திபன்.
இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் பார்த்திபன் 90களில் முன்னணி நடிகையாக இருந்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் 2001ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், அதன் பின்னணி குறித்து தற்போது சீதா மனம் திறந்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 புதிய பாதையில் புதிய காதல்

புதிய பாதையில் புதிய காதல்

1985ம் ஆண்டு வெளியான ஆண் பாவம் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சீதா. அதேபோல், புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் பார்த்திபன். புதிய பாதை படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்திருந்ததும் சீதா தான். அந்நேரம் கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்துகொண்டிருந்தார் சீதா. இதனிடையே பார்த்திபன் - சீதா இருவருக்கும் இடையே காதல் மலர, அது 1990ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

 11 ஆண்டுகளில் பிரிந்த ஜோடி

11 ஆண்டுகளில் பிரிந்த ஜோடி

அதன்பின்னர், இந்த ஜோடிக்கு 2 மகளும் 1 மகனும் பிறந்தனர். ஆனால், பார்த்திபன் - சீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று தனியாக பிரிந்தனர். திருமணம் ஆன 11 ஆண்டுகளில் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், சீதா கடந்த 2011ம் ஆண்டு சீரியல் நடிகர் சதீஷை திருமணம் செய்துகொண்டார். 2016ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில், சீதாவை பிரிந்தது பற்றி சமீபத்தில் பார்த்திபன் பேசியிருந்தார். அதில், சீதா தன்னிடம் அதிகமாக எதிர்பார்த்ததுதான் பிரிவுக்கு காரணமாக அமைந்தது என்று தெரிவித்திருந்தார்.

 மனம் திறந்த சீதா

மனம் திறந்த சீதா

இந்நிலையில், நடிகை சீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பார்த்திபனை விட்டு பிரிய காரணம் என்ன என்று மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "பார்த்திபன் தான் என்னிடம் முதலில் காதலை சொன்னார். தினமும் தொலைபேசியில் அழைத்து அந்த மூணு வார்த்தையை மட்டும் சொல்லிவிடுங்கள் என கேட்பார். ஒருநாள் பேசும்போது ஐ லவ் யூ என்று நான் சொன்னேன். அப்போது என் அப்பா வேறு ஒரு போனில் இருந்து இதை கேட்டுவிட்டார். அதன் பிறகு தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. மற்றபடி அவர் கூறுவதில் உண்மை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

 எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாதா?

எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாதா?

தொடர்ந்து பேசியுள்ள சீதா, "திருமணம் முடித்த பின்னர் எதிர்பார்ப்புகள் இருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்றால், கணவனிடம் இருந்து முழுதாக அன்பு கிடைக்க வேண்டும் என்பது தான். இது கூட இல்லை என்றால் பின் வாழ்க்கையில் என்ன தான் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு சுயமரியாதை இருக்க வேண்டும். கணவர் எந்த வேலை செய்தாலும் மனைவியை மதிக்க வேண்டும். அவருடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்குள்ளும் மரியாதை என்பது இருக்க வேண்டும். மரியாதை கொடுத்து நடந்தால் எந்த துறையில் கணவன், மனைவி வேலை பார்த்தாலும் விவாகரத்து என்பது இருக்காது" எனவும் தெரிவித்தார்.

 எனக்கு மட்டும் தான்

எனக்கு மட்டும் தான்

முக்கியமாக "ஒரு படத்தில் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என ஒரு பாடல் வரும். அந்தப் பாடலைப் போல நான் என்னுடைய வாழ்க்கையை எதிர்பார்த்தேன். எல்லா பெண்களும் போல நானும் அப்படி எதிர்பார்த்தான். அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பில் என்ன தவறு இருக்கிறது. இப்படிப்பட்ட மன வருத்தத்தால்தான் நாங்கள் பிரிந்தோம்" என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் சீதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X