34 வருஷமாச்சு சினிமாவுக்கு வந்து...ஆனா, இந்தி என்ட்ரி இப்பதான்...இந்த முன்னாள் ஹீரோயின் ஹேப்பி!

By

சென்னை: சினிமாவுக்கு வந்து 34 வருடத்துக்கு மேல் ஆனாலும் இப்போதுதான் நடிகை சீதா, இந்தி படத்தில் அறிமுகமாகிறார்.

ஆண்பாவம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சீதா. பாண்டியராஜன் நடித்து இயக்கிய இந்தப் படம் 1985 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து வந்தார் சீதா.

Actress seetha is doing her first hindi movie, after her 34 year carrier

புதிய பாதை படத்தில் நடித்தபோது பார்த்திபனுடன் காதலில் விழுந்தார். இருவரும் 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் சீதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.

இந்நிலையில் 2001 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்ற சீதா, படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இப்போது அவர் இந்தியில் அறிமுகமாகிறார்.

இயக்குனர் சுசிகணேசன், அவர் இயக்கிய திருட்டுப் பயலே 2 படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். இதில், வினீத்குமார் சிங், ஊர்வசி ராட்டெலா, அபிஷேக் ஓபராய் நடிக்கின்றனர். லக்னோ மற்றும் வாரணாசியில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது.

இதில், தமிழில் இயக்குனர் சுசி கணேசன் நடித்த கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். ஹீரோயினின் அம்மாவாக சீதா நடிக்கிறார்.

சீதா, சினிமாவுக்கு வந்து 35 வருடங்களாகிவிட்டாலும் இப்போதுதான் அவர் இந்தி சினிமாவில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X