Seetha Mother: நடிகை சீதாவின் தாயார் திடீர் மறைவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை சீதாவின் தாயார் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிந்தார். இதுகுறித்து நடிகை சீதா தனது இன்ஸ்டாகிராமில் சோகமாக பதிவிட்டுள்ளார். தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சீதாவின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். ரசிகர்கள் சீதாவிற்கு ஆறுதல் கூறி அவரது தாயாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்தி வருகின்றனர்.

ஆண் பாவம் படத்தில் கிராமத்து பெண்ணாக ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில், பாவாடை தாவணியில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சீதா. இந்த படத்திற்கு பின் ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, சங்கர் குரு, தங்கச்சி, துளசி, குரு சிஷ்யன், பெண்மணி அவள் கண்மணி, அவள் மெல்ல சிரித்தாள் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழிப்படத்திலும் நடித்துள்ளார்.

seetha mother death

நடிகை சீதா: இவர் பார்த்திபன் இயக்கிய புதிய பாதை படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் வயப்பட்டனர். இதையடுத்து இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், நடிகை சீதாவும், பார்த்திபனும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். பார்த்திபனை பிரிந்த சீதா தன்னுடன் சீரியலில் நடித்த சீரியல் நடிகர் சதீஷை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் பின் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து பேட்டி அளித்திருந்த சதீஷ், சீதாவும் நானும் நல்ல நண்பர்கள் எங்களுக்குள் எந்தவிதமான தவறான உறவும் இல்லை. இது என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார்.

மீண்டும் சினிமாவில்: சில ஆண்டுகள் திரையில் தலைகாட்டாமல் இருந்த சீதா மீண்டும் சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் சேனலில் 'கிச்சன் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பின் திடீரென சீதா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மேலும், இவர் சத்யராஜுடன் உப்பு புளி காரம் என்ற இணையத் தொடரில் நடித்திருந்தார்.

திடீர் மரணம்: நடிகை சீதா தற்போது விருகம்பாக்கத்தில் அவரின் தாயாருடன் வசித்து வந்த நிலையில் இன்று காலை சீதாவின் தாயார் காலமானார்.இந்த தகவலை நடிகை சீதா தனது இன்ஸ்டாகிராமில், அம்மாவின் போட்டோவை போட்டு, இன்று எங்களது பாசமிகு தாயார் சந்திரா மோகன் காலமானார் என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவிப்பதுடன் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X