Seetha: மொட்டை தல.. கையை தூக்கி அங்க வச்சி.. நடிகை சீதா செய்த சேட்டை!
சென்னை: நடிகை சீதா புதிய ட்ரெண்டிங் ஃபேஷன் லுக்கில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காடா வைத்துள்ளார். அவரின் இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி பலரும் லைக்குகளை குவித்து, ஷேர் செய்து வருகின்றனர்.
80களில் இருந்து இன்று வரை அதே அழகு, மாறாத தனித்துவமாக இருக்கும் நடிகை சீதா,1985 ஆம் ஆண்டு, பாண்டியராஜன் நடித்த 'ஆண் பாவம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். குறுகிய காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், மோகன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.ஆயிரம் பூக்கள் மலரட்டும், குரு சிஷ்யன், உன்னால் முடியும் தம்பி, அண்ணனுக்கு ஜெ போன்ற படங்கள் அவரது நடிப்புக் கரியரில் அசைக்க முடியாத முத்திரை பதித்த திரைப்படங்களாக உள்ளது.

நடிகை சீதா: 1990 ஆம் ஆண்டு இயக்குநரும் நடிகருமான பார்த்திபனை இயக்கிய புதிய பாதை திரைப்படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், 2001 ஆம் ஆண்டு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த சீதா, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு 'மாறன்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். அதைத்தொடர்ந்து, விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
சூப்பர் போஸ்: சினிமா மட்டுமல்லாது பெண், இதயம் போன்ற சீரியல்களில் நடித்துள்ள சீதா, அண்மையில் சத்யராஜுடன் இணைந்து 'மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். சினிமா என்றாலும், சீரியல் என்றாலும் தழையத் தழைய புடவையுடன் வந்த சீதா, தற்போது இந்த காலத்து டிரெண்டுக்கு ஏற்றால் போல, யுவத்தனமும், ஸ்டைலான மேக்க்ஓவரும் கொண்ட புகைப்படங்களைகளுக்கு போஸ் கொடுத்துள்ளார். அவரின் நவீன உடையும், புது எர்ஜியும் ரசிகர்களை உச்சு கொட்ட வைத்துள்ளது. பல ரசிகர்கள் வயது என்பது எண் மட்டும் தான் என்பதை சீதா நிரூபித்துவிட்டார் என பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











