சாலை விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை...சிகிச்சை பலனின்றி பரிதாப பலி..சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : பிரபல சீரியல் நடிகை டிராக்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

மாடல் நடிகையான கல்யாணி குராலே ஜாதவ் துஜ்யத் ஜீவ் ரங்லா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார்.

மராத்தி நடிகையான கல்யாணி குராலே ஜாதவ் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கல்யாணி குராலே ஜாதவ்

கல்யாணி குராலே ஜாதவ்

நடிகை கல்யாணி குராலே ஜாதவ் மராத்தியில் புகழ் பெற்ற நடிகை ஆவார். இவர், பல சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், விளம்பரங்களில் நடித்துள்ளார். நடிகை கல்யாணியின் ஹலோண்டி சாங்லி ஃபாட்டா உணவகத்தை நடத்தி வருகிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இந்த உணவத்தை நிர்வகித்து வருகிறார் நடிகை கல்யாணி குராரே ஜாதவ்.

சாலை விபத்தில் சிக்கினார்

சாலை விபத்தில் சிக்கினார்

இந்நிலையில் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு தனது ஓட்டலை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கோலாப்பூர் சாலையில் அதிவேகமாக எதிர்புறத்திலிருந்து வந்த டம்ப்பர் வாகனம் மோதியதில் கல்யாணி தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் நினைவிழந்து கிடந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சோகத்தில் மூழ்கியது

சோகத்தில் மூழ்கியது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை கல்யாணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவர் உயிரிழந்த செய்தி இணையத்தில் பரவியதை அடுத்து ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். பல திரைப்பிரபலங்கள் அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கண்கலங்கிய ரசிகர்கள்

கண்கலங்கிய ரசிகர்கள்

கல்யாணி குராலே ஜாதவ் இறப்பதற்கு 22 மணி நேரத்திற்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். இதில், சாலட் சாப்பிடும் போது ஒரு படத்தை வெளியிட்டார். கல்யாணி தனது ஹோ நா ஹோ பாடலில் நடனமாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதே போல, கடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு கண்கலங்கி ஆறுதல் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X