»   »  நடுரோட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகை!

நடுரோட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா : பெங்காலி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை காஞ்சனா மொயித்ரா. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை படப்பிடிப்பு முடித்துவிட்டு நள்ளிரவில் காரில் வீடு திரும்பியிருக்கிறார்.

அப்போது திடீரென்று வழிமறித்த மூன்று பேர் அதிகமாக மது அருந்திய நிலையில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டிருக்கின்றனர். காஞ்சனாவின் கார் சாவியைப் பறித்துக்கொண்ட அவர்கள் அவரிடம் தவறாக நடக்க முயன்றிருக்கின்றனர்.

Actress sexually harassed on road

இதனால் துன்பத்திற்கு ஆளான நடிகை அங்கிருந்து தப்பித்து போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். நடிகையின் புகாரின் பேரில் போலீசார் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டவர்களில் இருவரை உடனடியாகக் கைது செய்தனர்.

தப்பியோடிய ஒருவரை கொல்கத்தா போலீசார் தேடி வருகிறார்களாம். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறதாம். நள்ளிரவில் சாலையில் போகும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

English summary
Actress Kanchana Moitra is famous for acting in important roles in Bengali films. He finished shooting last Tuesday and returned home in midnight. Three people who have led him have tried to go wrong with the actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X