ஒடிடி-யில் ரிலீஸ் ஆகிறதா பிரபல நடிகை ஷகிலாவின் பயோபிக்..? படத்தை வாங்க அப்படி போட்டியாம்ல..!

By

சென்னை: நடிகை ஷகிலாவின் பயோபிக் படத்தை வெளியிட சில ஒடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

1994 ஆம் ஆண்டு பிளே கேர்ஸ் என்ற படம் மூலம் அறிமுகமானவர், ஷகிலா. தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

தமிழில் ஜல்லிகட்டுக்காளை, உதவிக்கு வரலாமா, மறுமலர்ச்சி ஆகிய படங்களில் நடித்த அவர், குளிர்காட்டு என்ற படம் மூலம் மலையாளத்துக்குச் சென்றார்.

மலையாள சினிமா

மலையாள சினிமா

ராக்கிளிகள், கின்னாரத் தும்பிகள் உட்பட அங்கு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு வரை தனது கவர்ச்சியால் மலையாள சினிமாவை கலக்கினார். இவரது படங்களைப் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. இவர் நடித்த படங்களின் வசூலும் அள்ளியது. பிரபல மலையாள முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்குத் தள்ளி வசூல் அள்ளின.

எதிர்ப்பு கிளப்பியது

எதிர்ப்பு கிளப்பியது

இது மலையாள ஹீரோக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷகிலா படங்களை தயாரித்தவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். இதையடுத்து ஷகிலா படங்களை பார்த்து இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று கேரளாவில் எதிர்ப்பு கிளப்பியது. அவரை மலையாள சினிமாவில் நடிக்க வாய்மொழி தடை பிறப்பித்தனர். பின்னர் அவர் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வந்தார்.

நடிகை ரிச்சா சத்தா

நடிகை ரிச்சா சத்தா

இப்போது காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது வாழ்க்கை கதை சினிமாவாகி இருக்கிறது. இதில் ஷகிலாவாக பிரபல இந்தி நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். பங்கஜ் திரிபாதி உட்பட பலர் நடிக்கின்றனர். கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் ஆக இருக்கிறது.

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ்

லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில் பல தயாரிப்பாளர்கள் ஒடிடி-யில் படங்களை வெளியிட்டு வருகின்றனர். பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்கள் ஒடிடி-யில் வெளியானது. மேலும் சில படங்கள் அதில் வெளியாக உள்ளன. இந்நிலையில் ஷகிலாவின் பயோபிக் படமும் நெட்பிளிக்ஸில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒடிடி தளங்கள்

ஒடிடி தளங்கள்

இதுபற்றி படத்தின் இயக்குனர் இந்திரஜித் லங்கேஜ் கூறும்போது, 'படத்துக்கு இன்னும் தணிக்கை முடியவில்லை. கதையில் அழகான மெசேஜ் இருக்கிறது. லாக்டவுன் முடிந்ததும் தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளோம். இருந்தாலும் சில ஒடிடி தளங்களில் இருந்தும் அழைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதனுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X