அவங்க மாயா இல்ல ஆயா.. பிக்பாஸில் இருக்கும் ஆண்களுக்கு பாதுகாப்பு தேவை.. வச்சு செய்த ஷகிலா!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்களுக்குத்தான் பாதுகாப்பு தேவை என்று நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் அதிரடியாக எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்த ஐசு குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் சீசன் 7: கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக இருந்த மாயா, அர்ச்சனா மற்றும் விசித்ராவை வேண்டும் என்றே வம்புக்கு இழுத்து சண்டை போட்டார். அதுமட்டுமில்லாமல் பூர்ணிமா, ஜோவிகா என தனக்கு என்று ஒரு டீமை வைத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் தனி ராஜ்ஜியமே நடத்தினார். இதனால், சோஷியல் மீடியாவில் மாயாவுக்கு எதிராக பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
விளாசி கமல்: அதே இந்த வாரம் பஞ்சாயத்து பேச வந்த கமல்ஹாசன், மாயா நடந்து கொண்ட விதம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும், பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பியது குறித்து பேசிய கமல், பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியில் அனுப்பியது நான் இல்லை, நீங்கள் சிகப்பு மஞ்சளா தெரிஞ்சது என்றால், உங்களுக்கு என்ன மாலைக்கண்ணா, கொடுக்க மாட்டன்னு சொல்லி இருக்கலாமே என சரமாரியாக கேள்விகளை கேட்டார்.
நடப்பதே வேறு: இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஷகிலா, அதில் மாயா என்பவர் ஒரு ஆயா மாதிரி, அவங்களுக்கு எல்லா விஷயமும் தெரிந்து இருக்கிறது. தைரியமாக பேசுவது என்பது வேற, ஆனால், மாயா மற்றவர்களை விமர்சனம் செய்கிறார். கேப்டன் ஆகிவிட்டதால் பைத்தியக்காரத்தனமாக பேசினார். விசித்ரா ஒரு பிரஷ் கேட்டா கை யூஸ் பண்ணிக்கொங்க என்று சொன்னது எல்லாம் ரொம்ப ஓவர். விசித்ரா இடத்தில் நான் இருந்து இருந்தால் நடந்து இருப்பதே வேற.
மாயா இல்ல ஆயா: மாயா கமல் படத்திலும் லியோ படத்தில் நடித்திருந்தாலும் அவரின் பின்புலம் எனக்கு தெரியவில்லை. தன்னை பெரிய அழகின்னு நெனச்சுக்கிட்டு இருக்காங்க. நான் ஆயா என்று ஒத்துக் கொள்கிறேன். அதேபோல் மாயாவும் ஆயா தான் என்று ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும். பிக் பாஸ் வீட்டில் கானா பாலாவைத் தவிர அனைத்து ஆண்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நடிகை ஷகிலா, மாயாவின் செயல் குறித்து கிழி கிழி என கிழித்து உள்ளார்.


Click it and Unblock the Notifications











