ஏழைகளுக்கு ஓடி ஓடி உதவினா..கடைசில சிந்துக்கு இப்படி ஒரு நிலைமையா? கண்கலங்கிய ஷகிலா!
சென்னை: ஏழைகளுக்கு ஓடி ஓடி உதவி செய்த சிந்துவிற்கு இப்படி ஒரு நிலைமையா என நடிகை ஷகிலா கண்கலங்கி பேட்டி அளித்துள்ளார்.
வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் தனது குணச்சித்திர நடிப்பு மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்றவர் நடிகை சிந்து.

அங்காடித்தெரு படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்த சிந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
அங்காடித்தெரு சிந்து: புற்றுநோய் சிகிச்சை காரணமாக அவருக்கு முதலில் ஒரு பக்கம் மார்பகம் அகற்றப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் அடுத்த மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவியதால், பல இன்னல்களை அனுபவித்து வந்த நடிகை சிந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்.
ஓடி ஓடி உதவிசெய்தார்: சிந்துவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஷகிலா, அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அங்காடித்தெரு சிந்து இன்று நம்முடன் இல்லை என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது. கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு ஓடி ஓடி உதவி செய்தார். வெயில், மழை எதையும் பார்க்காமல் பட்டினியாக கிடந்தவர்களுக்கு உதவி செய்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவரால் சாப்பிடக்கூட முடியவில்லை.
கண்கலங்கிய ஷகிலா: கடவுள் ஏன் அவளுக்கு அவ்வளவு கஷ்டத்தை கொடுத்தார் என்று தெரியவில்லை. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளை மன்னிப்பவர் தானே கடவுள். அவள் தெரியாமல் ஏதாவது தவறு செய்திருந்தாலும் அவளை, கடவுள் மன்னித்து இருக்கக்கூடாதா, கடவுளின் மேல் இருந்த நம்பிக்கையே போய்விட்டது. ஒரு வாரமாக மருத்துவமனையில் சிந்து பட்ட கஷ்டத்தைப் பார்த்து அவர் இறந்துவிடவேண்டும் என்று நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தோம். அந்த அளவுக்கு அவர் கஷ்டத்தை அனுபவித்துவிட்டார்.
மகளுக்கு உதவுங்கள்: சிந்துவிற்கு ஒரு மகள் இருக்கிறாள், அவளுக்கு ஒரு குழந்தை உள்ளது. யாருடைய ஆதரவும் இல்லாமல் நிற்கும் அவளுக்கு உறுதுணையாக இருந்து, அவளை நாங்கள் பார்த்துக்கொள்வோம். அதேபோல சின்னத்திரை பெரிய திரை போன்ற அனைத்து சங்கத்தினரும் சிந்துவின் மகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என நடிகை ஷகிலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











