சாதி வெறியை தூண்டும் பேச்சு.. யூடியூபர் திவாகரை விடாதீங்க.. ஷகிலா பரபரப்பு புகார்!
சென்னை: யூடியூப் பிரபலம் வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் சாதி மோதல்களைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஷகிலா புகார் அளித்துள்ளார்.
யூடியூபில் கோமாளித்தனமாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்து அதன் மூலம் பிரபலமாவது தற்போது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. அப்படி பிரபலமானவர் தான் வாட்டர் லெமன் ஸ்டார் திவாகர். இவர் சூர்யா நடித்த கஜினி படத்தில், சூர்யா தர்பூசணி சாப்பிடும் ஒரே ஒரு காட்சியில், நடித்து, தன்னுடைய இணைய தளத்தில் அதை வெளியிட்டு, அதன் மூலம் பிரபலமானார். பல சர்ச்சைக்குரிய கருத்துகளை இவர் கூறி வந்தாலும், தனக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என வாய்ப்பு வந்ததை பேசி வருகிறார்.

வாட்டல் லெமன் ஸ்டார்: விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்' படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். அதன் பிறகு நான் தான் மிகப்பெரிய நடிகன், மற்ற நடிகர்கள் என்னிடம் தோற்றுப்போவார்கள் என, எத்தனை பேர் தன்னை கேலி கிண்டல் செய்தாலும், தன்னை ஒரு பெரிய நடிகராக நினைத்துக்கொண்டு பேட்டியில் பேசினார். அப்போது தொகுப்பாளர்கள் இவரை மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் அந்த கேள்விக்கெல்லாம் சளைக்காமல் பதில் சொல்லி தன்னை சிவாஜி போல ஒரு நடிகராகவே காட்டிக்கொண்டார் வாட்டர் லெமன் ஸ்டார்ட் திவாகர்.
அவன் ஒரு நடிகனா: அண்மையில் இவர் அக்யூஸ்ட் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். அந்த படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் கடுப்பாகி, அந்த படத்தின் கதாநாயகன் உதயாவிடம் இவனையே இந்த படத்தில் நடிக்க வைத்தீர்கள். இவன் எல்லாம் ஒரு நடிகனா, பத்திரிக்கையாளர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவன். இவனை போன்றவர்களை படத்தில் நடிக்க வைக்க கூடாது என பெரிய அளவில் எதிர்ப்பை காட்டினார்கள்.
ஷகிலா புகார்: இந்நிலையில், நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், வாட்டர் லெமன் ஸ்டார் திவாகர், தனது யூடியூப் சேனலில், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும், சாதி ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். ஒரு பொறுப்புள்ள சமூகப் பிரபலம் என்ற முறையில், திவாகரின் இந்த செயல்களை எதிர்த்து குரல் கொடுப்பது தனது கடமை என்றும், அவரின் கருத்துக்கள் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷகிலா அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











