ஷூட்டிங்கில் வடிவேலு எப்படி இருப்பாரு.. என்ன கேப்பாருனு எனக்கு தெரியும்.. பகீரை கிளப்பிய ஷகீலா!
சென்னை: Actress Shakeela (நடிகை ஷகீலா) வடிவேலு மீது பல நடிகர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில், நடிகை ஷகீலா அவரை பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி உள்ளார்.
90களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ஷகீலா, தமிழ் மட்டுமில்லாது பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சி படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகீலா இப்போது காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

நடிகை ஷகீலா: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் மிகவும் பிரபலமான ஷாகிலா தற்போது, யூடியூபில் நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்து வருகிறார். இவர் அண்மையில் நடிகையின் அந்தரங்க விஷயம் குறித்து பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு அவரை திக்குமுக்காட வைத்தார். அந்த பேட்டி சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
நடிகை பிரேம பிரியா: தற்போது இவர், வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற காமெடி நடிகர்களுடன் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பிரேம பிரியாவிடம் பேட்டி அடுத்தார். அப்போது பிரேம பிரியா, என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலு தான், எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. நானும் ஷூட்டிங்கிற்கு போவேன், ஆனால், வடிவேலு என்னை பார்த்ததும் இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிடுவார். இதுமாதிரி நிறைய படங்களில் நடந்து இருக்கு.
மிரட்டினார்: இதை நான் ஒரு யூடியூப் சேனலில் சொல்லிவிட்டதால், என்னை ஒரு இயக்குநர் தொலைபேசியில் மிரட்டி மறுப்பு வீடியோ வெளியிட சொன்னார். ஆனால், நான் முடியாது உண்மையைத் தான் சொன்னேன் என்று சொல்லிவிட்டேன் என்றார். சுறா படத்தில் வடிவேலுவுடன் நடித்த போது, ஏன் வேண்டாம் என்று சொல்றீங்க என்று கேட்டேன் அதற்கு அவர் பதில் சொல்லவில்லை என்றார்.
வடிவேலு என்ன கேப்பாருனு எனக்கு தெரியும்: அப்போது குறுக்கிட்ட ஷகீலா, நீ அப்போதே வடிவேலு மீது மீ டூ புகார் கொடுத்து இருக்கலாமே என்று கேட்க. எனக்கும் வடிவேலுக்கும் மீ டூ பிரச்சனை எல்லாம் இல்லை, அது வேறு பிரச்சனை என்று பிரேம பிரியா சொல்ல, இப்போ வேண்டுமானால், மீ டூ பிரச்சனை இல்லை என்று சொல்லாம். ஆனால், வடிவேலுவை பற்றி எனக்கு நன்றாக தெரியும், அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பாரு.. என்ன கேப்பாருனு எனக்கு தெரியும் என்று நடிகை ஷகீலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











