திருஷ்டி சுற்றிப் போட்டதுடன் மிரட்டவும் செய்த நடிகை ஷகிலா.. அந்தப் பக்கம் யாரு தெரியுமா?

சென்னை: நடிகர் சூரி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார். காமெடியனாக வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் சூரி. தொடர்ந்து சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்தார்.

இவரது சினிமா பயணம் ஒரே படத்தில் மாறியது. இயக்குநர் வெற்றிமாறன் கண்ணிற்கு சூரியின் ஹீரோயிசம் தெரிந்ததன் விளைவு கடந்த ஆண்டில் சூரி ஹீரோவாக நடித்து விடுதலை படம் வெளியானது. இந்தப் படத்தில் குமரேசன் என்ற ஹீரோ கேரக்டரில், என்னது இவர் முன்னாடி காமெடியனாக நடித்திருக்கிறாரா என்ற அளவிற்கு கேரக்டரை பதிவு செய்திருந்தார் சூரி.

soori shakeela tamil cinema

நடிகர் சூரி: நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியானது விடுதலை. முன்னதாக சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்துவந்த நடிகர் சூரி இந்தப் படத்தில் நாயகனாக களமிறங்கினார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாகவே கைக்கொடுததது. விளைவு அடுத்தடுத்து ஹீரோவாகவே நடித்து வருகிறார் சூரி. இந்தப் படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபள் கேரக்டரில் நடித்திருந்த சூரியின் காதல் போர்ஷன்கள், ஆக்ஷன் போர்ஷன்கள் என அனைத்தும் ரசிகர்களை அதிர வைத்தது. வெற்றிக்கும் வழியிட்டது.

விடுதலை படம்: காடு, மலை என இந்தப் படத்திற்காக படக்குழுவினர் மெனக்கெட்டதற்கு ரசிகர்கள் அன்புப்பரிசாக வெற்றியை கொடுத்தனர். படம் மிகப்பெரிய கவனத்தையும் வெற்றியையும் கொடுத்துள்ள நிலையில், அடுத்த பாகமும் ரெடி. இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், இந்த பாகத்தில் வாத்தியாராக நடித்துள்ள விஜய் சேதுபதியை அதிகமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திலும் சூரி நடித்துள்ள நிலையில், அவரது கேரக்டர் விரிவாக்கம் எப்படி இருக்கும் என்ற யோசனை ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

நடிகை ஷகிலா: விடுதலை படத்தை தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி என அடுத்தடுத்து சூரி ஹீரோவாக நடித்து படங்கள் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய ஹீரோ இமேஜை கொடுத்துள்ளது. தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் விடுதலை 2 படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சூரிக்கு கோலிவுட்டில் அதிகமான வரவேற்பு காணப்படுகிறது. தற்போது நடிகை ஷகீலா, சூரீயை திருஷ்டி கழித்ததை பார்க்க முடிந்தது. மேலும், சூரி செயல்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் அவர் ஒரு சகோதரிக்கான கண்டிப்புடன் விரலை உயர்த்தி மிரட்டலுடன் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சூரி கன்னத்தை கிள்ளிய ஷகிலா: மேலும் சூரியின் கன்னத்தை கிள்ளியும் அவர் பாராட்டியுள்ளார். இதையடுத்து சூரியும் மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளாகி அவர் கூறியதை எல்லாம் மௌனமாக கேட்டுக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. காமெடியனாக இருந்தபோதே ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்த சூரி, தன்னுடைய பாடி லேஞ்குவேஜ் உள்ளிட்டவற்றால் ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தார். காமெடியனாக இருந்தபோதிலும் நடிக்க கிடைக்கும் சிறிய வாய்ப்புகளையும் அவர் சரியாக பயன்படுத்தினார். இதுவே தற்போது இவர் ஹீரோவாக கெத்து காட்ட காரணமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X