அரசியலில் குதித்த கவர்ச்சி நடிகை.. வந்ததுமே இந்த வாங்கு வாங்குறாங்களே!
சென்னை: பிரபல கவர்ச்சி நடிகையான ஷகிலா அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.
மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஷகிலா. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.
ஏராளமான படங்களில் நடித்துள்ள ஷகிலா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதேபோல் யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

தமிழக காங்கிரஸில் ஷகிலா
அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் ஷகிலா. இந்நிலையில் நடிகை ஷகிலா அரசியலில் குதித்துள்ளார். அதாவது தமிழக காங்கிரஸின் கட்சியில் இணைந்துள்ளார் நடிகை ஷகிலா. அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

பெண்கள் மீதான வன்முறை
இதற்கான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார் ஷகிலா. தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஷகிலா, பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது மனவேதனையைத் தருவதாக கூறினார்.

அதிகாரம் பெற விரும்புகிறேன்
பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறிய ஷகிலா பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். நடிகை என்பதை தாண்டி ஒரு தனி அடையாளம், தனி அதிகாரம் பெற விரும்புகிறேன் என்றார்.

குஷ்பு இடத்தை நிரப்பவா?
மேலும் நல்லது செய்ய வேண்டும் என்றாலும் கூட ஒரு 'பவர்' வேண்டும் என்ற அவர் நிச்சயமாக எனது தேவைக்காக மட்டுமே அரசியலுக்கு வரவில்லை. காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக நான் வந்துள்ளேனா? என்று கேட்கிறார்கள்.

காரணம் இருக்கும்..
நிச்சயமாக இல்லை. குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்றார். மேலும் கட்சி அனுமதி கொடுத்தால் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்ற அவர், சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.


Click it and Unblock the Notifications











