ஷகீலா சமையல்.. கேட்கவே எவ்ளோ நல்லா இருக்கு.. ’குக் வித் கோமாளி’க்கு நல்லா மசாலா சேர்க்குறீங்க!

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

அதற்கான போட்டியாளர்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுவார்கள் என விஜய் டிவி அறிவித்து இருந்தது.

ஆரம்பமே அசத்தல் என்பது போல, முதல் போட்டியாளராக கவர்ச்சி நடிகை ஷகீலாவை களமிறக்கி உள்ளனர்.

சுரேஷ் தாத்தா

சுரேஷ் தாத்தா

அவசர அவசரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் தாத்தா வெளியேறியதும் பதறிய பிக் பாஸ் ரசிகர்கள், குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சிக்காகத் தான் அவர் வெளியேறி உள்ளார் என ஆறுதல் அடைந்து வருகின்றனர். சுரேஷ் சக்கரவர்த்தியை முதல் போட்டியாளராக அறிவிப்பார்கள் என பார்த்த ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.

வனிதா அக்கா சமையல்

வனிதா அக்கா சமையல்

குக் வித் கோமாளி முதல் சீசனில் வனிதா விஜயகுமார், உமா ரியாஸ், ரம்யா பாண்டியன், நடிகை ரேகா, தாடி பாலாஜி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிக் பாஸ் தமிழ் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் அந்த நிகழ்ச்சியில் வேற லெவலில் சமைத்து அசத்தினார்.

பிக் பாஸ் சம்மந்தம்

பிக் பாஸ் சம்மந்தம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறையவே சம்மந்தங்கள் உள்ளன. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அறந்தாங்கி நிஷா, போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், ரேகா எல்லாம் இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய போட்டியாளர்களான வனிதா, தாடி பாலாஜி, மோகன் வைத்தியா உள்ளிட்டோர் குக் வித் கோமாளி போட்டியாளர்கள். எல்லாம் விஜய் டிவி குடும்பம் தானே!

குக் வித் கோமாளி 2

குக் வித் கோமாளி 2

குக் வித் கோமாளி சீசன் 2 தீபாவளியன்று துவங்குகிறது. அது தொடர்பாக வெளியான புரமோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது. சூப்பர் சிங்கர் சிவாங்கி, புகழ், பாலா, மணி மேகலை, பிஜிலி ரமேஷ், பப்பு, தங்க துரை, சாய் சக்தி உள்ளிட்டோர் கலந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று முதல் வெளியாக ஆரம்பித்துள்ளது.

ஆரம்பமே அசத்தல்

தென்னிந்திய சினிமா உலகை தனது கவர்ச்சியால் கட்டிப் போட்ட நடிகை ஷகீலா, குக் வித் கோமாளி சீசன் 2வின் முதல் போட்டியாளராக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகி உள்ளார். இவர் நம்ம லிஸ்ட்லயே இல்லையே என குக் வித் கோமாளி ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்த் வருகின்றனர். பிக் பாஸ் போலவே இதுவும் வைரலாகி விடும் போல தெரிகிறது.

ஷகீலா சமையல்

ஷகீலா சமையல்

சுரேஷ் தாத்தாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சியாக ஷகீலாவின் என்ட்ரி அறிவிப்பு அமைந்துள்ளது. சமையல் நிகழ்ச்சி என்பதால், போட்டியாளர்களிலேயே நல்ல மசாலாவை தூவ விஜய் டிவி ஆரம்பித்து விட்டது என்றும் ரசிகர்கள் கண்டபடி கமெண்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.

அடுத்த சீசனில்

அடுத்த சீசனில்

மேலும், குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகை ஷகீலா கலந்து கொள்வது உறுதியாகி உள்ள நிலையில், பிக் பாஸ் சீசன் 5ல் ஷகீலா போட்டியாளராக கலந்து கொள்வார் என இப்போதே பிக் பாஸ் ரசிகர்கள் சத்தியம் அடிக்காத குறையாக சொல்ல ஆரம்பித்து விட்டனர். இன்னும் நிறைய சர்ப்ரைஸ் என்ட்ரிகள் குக் வித் கோமாளியில் இருக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X