shakeela: நா பொம்பள இல்லயா.. எனக்கு யாரும் செட் ஆகல.. ஷகிலா பளீச் பதில்!
சென்னை: எனக்கு கல்யாணம் பண்ண ஆசை இருந்தது ஆனால், யாரும் எனக்கு செட் ஆகவில்லை என்று நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார்.
மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ர்ஸ் திரைப்படத்தின் துணை நடிகையாக அறிமுகமானார்

ஷகிலா. பாலுணர்வு கிளர்ச்சியூட்டும் படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு புகழ் பெற்றார்.
நடிகை ஷகிலா: 90களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர் ஷகிலா. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை விட இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. ஷகிலா கிட்டத்தட்ட 110க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆபாச படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா, குணசித்திர வேடம், நகைச்சுவை கதாபாத்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இணையத்தில் பேட்டி: நடிகை ஷகிலா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் யூடியூப் ஒன்றுக்கு அளித்துள்ள பழைய பேட்டி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் தொகுப்பாளர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்த ஆசை இல்லையா என கேட்டிருந்தார்.

நா பொம்பள இல்லயா: இதற்கு பதில் அளித்த அவர், ஏன் நா பொம்பள இல்லயா, எனக்கும் ஆசை இருந்தது. ஆனால், யாரும் செட் ஆகவில்லை. ஏன் என்றால் ஒவ்வொருத்தரையும் நான் துரத்திவிட்டுடுவேன். மூனு வருஷம் ஒருத்தன், நாலு வருஷம் ஒருத்தன், ஏழு வருஷம் ஒருத்தன், பத்து வருஷம் என ஒவ்வொருத்தர் கூடவும் இத்தனை வருஷம் வாழ்ந்து இருக்கிறேன்.

குடும்பத்தை பார்த்தேன்: அனைவரும் போனதற்கு காரணம் நான் தான், குடும்பமா வாழ்க்கையானு கேள்வி வந்த போது, நான் என் குடும்பத்தை பார்த்துக்கொண்டு என் வாழ்க்கையை பார்க்காமல் விட்டு விட்டேன். இதனால் தான் இப்போது தனியாக இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் மனம் திறந்து தனது திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











