Shakeela - சொத்து எல்லாம் இல்லை.. என் உடம்பை நான் காட்டுறேன் - ஷகிலா அதிரடி

சென்னை: Shakeela (ஷகீலா) என் உடம்பு அதை நான் காண்பிக்கிறேன் அதில் உங்களுக்கு என்ன என்று நடிகை ஷகிலா அதிரடியாக தெரிவித்தார்.

இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது.

Actress Shakeela Opens up about her carreer life

ஷகீலாவை ஓங்கி அறைந்த சில்க் ஸ்மிதா: அந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஷகீலாவை சில்க் ஸ்மிதா அறைய வேண்டும். அந்த காட்சி எடுக்கப்படுவதற்கு முன்பு சில்க்கிடம் சென்ற ஷகீலா எப்படி அறைவீர்கள் என கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஷகீலாவை சில்க் ஸ்மிதா ஓங்கி அறைந்துவிட்டார். சில்க் ஸ்மிதா அப்படி நடந்துகொண்டதை இன்றுவரை தன்னால் மறக்க முடியவில்லை என ஷகீலா பலமுறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மோதிர கையால் குட்டுப்பட்ட கதை: சில்க் ஸ்மிதாவின் கையால் அறை வாங்கியதாலோ என்னவோ அவருக்கு போட்டியாகவே திரையுலகம் ஷகீலாவை முன்னிறுத்தியது. அதற்கு தகுந்தாற்போல் ஷகீலாவும் பல அடல்ட் படங்களில் நடித்தார். சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து இறந்துபோக அவரது இடத்தை ஷகீலா கிட்டத்தட்ட நெருங்கினார். ஆனால் சில்க் இடத்தை அவரால் முழுவதுமாக பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் ஷகீலாவின் வளர்ச்சி அசுர வேகத்திலேயே இருந்தது.

100 நாள்கள் ஓடிய படம்: ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாள்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார். அதுமட்டுமின்றி ஷகீலாவுக்கு இருக்கும் க்ரேஸை பார்த்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே கொஞ்சம் பயந்துபோனார்கள் என்ற பேச்சும் எழுந்தது உண்டு.

ஷகிலாவின் பேட்டி: இந்நிலையில் ஷகீலா சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளத். அதில், பேசிய அவர், "நான் மலையாளத்தில் அதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன் என்றுதான் சொன்னேன்.

ஆனால் பலரும் நான் படத்தில் நடிக்கமாட்டேன் என்று சொன்னதாக நினைத்துக்கொண்டார்கள். அதை இப்போது தெளிவுப்படுத்த வேண்டியது என் கடமை. நான்கு வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் சும்மாதான் இருந்தேன். அந்த காலகட்டத்தில் நான் ஏற்கனவே சம்பாதித்த பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டினேன்.

Actress Shakeela Opens up about her carreer life

என் உடம்பு நான் காட்டுகிறேன்: என்னிடம் இப்போது சொத்து என்று எதுவும் இல்லை கடவுள் மட்டும்தான் இருக்கிறார். ஏன் உடம்பை நான் காட்டினேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்னை. நீங்களா பணம் தரப்போகிறீர்க்ள். எனக்கு என்று ஒரு குடும்பம் இருக்கு. அந்த குடும்பத்தை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் வாழ வேண்டும் அதனால் அப்படி செய்தேன். " என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X