காசுக்காக அப்படி நடிச்சேன்.. பெண்கள் என்னை செருப்பால அடிக்க வந்தாங்க.. மனதை கலங்க வைத்த ஷகீலா!

சென்னை: தமிழ், மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் ஷகீலா. தற்போது தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்த கொண்டபின் ஷகிலாவின் இமேஜ் மொத்தமாக மாறியது. தற்போது ஷகிலா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

நடிகை ஷகிலா ஆதன் யூடியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நான் விருப்பப்பட்டு சினிமாவிற்கு வரவில்லை. குடும்ப சூழ்நிலையால் சினிமாவிற்கு வந்தேன். அப்பா கிளப்புக்கு சென்று பணத்தை தொலைத்துவிடுவார். இதனால், அம்மா மெஸ் வைத்து இருந்தார்கள் அதுவும் லாஸ் ஆகிவிட்டதால்,வேறு வழியே இல்லாமல் சினிமாவிற்கு வந்தேன். ஆனால், எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. என் உடலுக்கும் உயரத்திற்கும் அது சரியாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால், அது முடியாமல் போய்விட்டது.

shakeela interview

பணத்திற்காக நடித்தேன்: சினிமாவிற்கு வந்த புதிதில் நல்ல கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தேன். அந்த நேரத்தில் என் குடும்பத்திற்கு பணத்தேவை அதிகமாக இருந்தது, என் அக்கா கர்ப்பமாக இருந்தார், அப்பாவும் இறந்துவிட்டதால் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு எனக்கு வந்துவிட்டது. இந்த நேரத்தில் தான் மலையாளப்படத்தில் நடித்தேன். அந்த படத்தில் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டேன், தயாரிப்பாளர் ஓகே சொல்லிவிட்டதால் அந்த படத்தில் நடித்தேன். பெரிய பெரிய இயக்குநர்கள் கொடுத்த வாய்ப்பை நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இந்த மாதிரி படத்தில் நடிக்கவில்லை, என்னை நடிக்க அழைத்த படத்தில் நடித்தேன்.

யாரையும் கெடுக்கல: வயிற்று பசிக்கு சோறு வேண்டும், எவன் குடும்பத்தையும் அழிக்கல, எவன் கழுத்தையும் அறுக்கல, என் உடம்பு இருந்தது அதை காண்பித்து நடித்து சம்பாதித்துக் கொண்டேன். இதனால், பல தயாரிப்பாளர்கள், பல தொழில்நுட்ப கலைஞர்கள் நன்றாக வாழ்ந்தார்கள் இதை நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக போக வேண்டியது தான்.

shakeela interview

செருப்பால அடிக்க வந்தாங்க: ஆனால், எனக்கு ஆண் ரசிகர்கள் அதிகமாக இருந்தார்கள். இதனால் பெண்களுக்கு என்னை பார்த்தாலே முடியாது. ஏன் என்றால், பல பேர் யாருக்கும் தெரியாமல் என் படத்தை தலையில் துணிப்போட்டுத்தான் பார்ப்பார்கள். இதனால், பெண்களுக்கு என் மீது வெறுப்பு. ஒரு முறை நான் திருநெல்வேலியில் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்ற போது கூட்டம் அதிகமாக வந்ததால், புர்கா போட்டுவர சொன்னார்கள், நானும் புர்கா போட்டு கொண்டு போனேன். ஆனால் படத்தில் திறந்துக்காட்டி நடிப்பவர் எப்படி புர்கா போடலாம் என்று செருப்பை கழட்டி அடிக்க வந்தார்கள். அப்போதே, இனி புர்கா போடமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

யாரும் வாய்ப்பு தரவில்லை: நானும் நல்ல கதை உள்ள படத்தில் நடிக்க ஆசைப்பட்டு மலையாளத்தில் அப்படி ஒரு கதையில் நடித்தேன். அந்த படத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால், அந்த கட்சியை எல்லாம் தூக்கிவிட்டு படத்தில் பல இடத்தில் பிட்டை சேர்த்துவிட்டார்கள். அப்போது தான் இனி மலையாள படத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துவிட்டு, 23 படத்திற்கு வாங்கிய அட்வான்சை திருப்பி கொடுத்தேன். அதன் பிறகு நாலு வருஷம் வீட்டில் இருந்தேன். வாய்ப்பு கேட்டும் யாரும் எனக்கு வாய்ப்பு தரல, இவங்களை படத்தில் போட்டால் படத்தின் நிறம் மாறிடும் என்று யாரும் எனக்கு வாய்ப்பு தரவில்லை. அதன் பிறகு தான் எனக்கு ஜெயம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது அதை நான் மறக்கவே மாட்டேன் என்று ஷகீலா அந்த பேட்டியில் பல விஷயத்தை பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X