shakeela : அந்த ஆசையால் சினிமாவில் நடிக்க முடிவு செய்தேன்.. ஷகீலா சொன்ன காரணம்!
சென்னை : சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்ததே இதனால் தான் என்று நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
1990களில் கொடி கட்டிப்பறந்த நடிகைகளில் ஷகிலாவும் ஒருவர், இவருடைய கவர்ச்சிப்படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரையங்க வாசலில் காத்திருந்த காலமும் உண்டு.
கடந்த சில வருடங்களாக கவர்ச்சிப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட ஷாகிலா யூடியூப் சேனலில் பிரபரங்களை பேட்டி எடுத்து வருகிறார்.

நடிகை ஷகிலா
மலையாளத்தில் ஏராளமான கவர்ச்சி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகிலா. 1994 முதல் 2003 வரை நூற்றுக்கும் மேற்பட்ட கவர்ச்சி படங்களில் நடித்த ஷகிலாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களை விடவும் ஷகிலாவின் திரைப்படங்கள் வசூலை அள்ளின. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா என பல இடங்களிலும் ஷகிலாவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.

அடுத்தடுத்த படங்களில்
2003ல் வெளியான ஜெயம் படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார் ஷகிலா. அதன்பின்னர் தூள், வாத்தியார், வியாபாரி, அழகிய தமிழ் மகன் உட்பட பல தமிழ்ப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வரும் ஷகிலா, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொண்டார். அன்று முதல் ஷகிலாம்மா என மரியாதைக்குரிய வார்த்தையால் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

பிஸியாக இருக்கிறார்
தற்போது, யூடியூபில் பிரபலங்களை ஷகிலா பேட்டி எடுத்து வருகிறார். அண்மையில் இவர் பயில்வான் ரங்கநாதனை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இருந்தார். ஷகிலாவின் கேள்விக்கு பயில்வான் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இந்த பேட்டி இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டனது தற்போது இவர் பிரபல நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணத்தை பேட்டி எடுத்துள்ளார்.

அந்த ஆசையால் தான்
அந்த பேட்டியில், நீங்கள், ராம்கி நடித்த படத்தின் ஷூட்டிங் வடபழனியில் ஒரு பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்தது. அப்போது, ஷூட்டிங்கில் வெரைட்டி, வெரைட்டியா சாதம், குழம்பு என வகையாக இருந்ததால் அதைப் பார்த்ததும் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. எனக்கு சாப்பாடு என்றால் ரொம்ப பிடிக்கும், நான் நல்லா சாப்பிடுவேன், ஆனால், எங்க வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு குழம்பு, பொரியல் தான் வைப்பார்கள் சாப்பாட்டின் மீது இருந்த ஆசையால் தான் சினிமாவில் நடிக்க வந்தேன் என்று கூறியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











