பிரபல ஹீரோ பற்றி அப்படிச் சொன்ன நடிகை ஷகிலா... வசமாக மோதிக்கொண்ட ரசிகர்கள்

By

சென்னை: நடிகை ஷகிலா, பிரபல ஹீரோ பற்றி சொன்ன கமென்ட்டால், ரசிகர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர்.

1994 ஆம் ஆண்டு பிளே கேர்ஸ் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷகிலா. தொடர்ந்து தமிழில் ஜல்லிகட்டுக்காளை, உதவிக்கு வரலாமா, மறுமலர்ச்சி ஆகிய படங்களில் நடித்த அவர், குளிர்காட்டு என்ற படம் மூலம் மலையாளத்துக்குச் சென்றார்.

ராக்கிளிகள், கின்னாரத் தும்பிகள் உட்பட அங்கு ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு வரை தனது கவர்ச்சியால் மலையாள சினிமாவை கலக்கினார்.

கடுமையான கூட்டம்

கடுமையான கூட்டம்

இவரது படங்களைப் பார்க்க தியேட்டர்களில் கடுமையான கூட்டம் அலை மோதியது. இவர் நடித்த படங்களின் வசூலும் அள்ளியது. பிரபல மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி படங்களை பின்னுக்குத்தள்ளி இவர் படங்கள் வசூல் அள்ளின. இது மலையாள ஹீரோக் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கெட்டுப் போகிறார்கள்

கெட்டுப் போகிறார்கள்

ஷகிலா படங்களை தயாரித்தவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். இதையடுத்து ஷகிலா படங்களை பார்த்து இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று கேரளாவில் எதிர்ப்பு கிளப்பியது. அவரை மலையாள சினிமாவில் நடிக்க வைக்காமல், வாய்மொழி தடை பிறப்பித்தனர். பின்னர் அவர் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வந்தார். சில படங்களில் நடித்தார்.

ரிச்சா சத்தா

ரிச்சா சத்தா

இந்நிலையில், அவரது வாழ்க்கை கதை இப்போது சினிமாவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஷகிலாவாக பிரபல இந்தி நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில் ஷகிலா கொடுத்த பேட்டி ஒன்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹீரோவைத் தெரியாது

அதாவது, தெலுங்கு சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டார்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் பற்றி ஒவ்வொரு வரியில் பதில் சொல்லுங்களேன் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷகிலா, மகேஷ்பாபு என் சகோதரர் போன்றவர் என்றார். ஜூனியர் என்.டி.ஆரை சிறப்பாக நடனம் ஆடுவார் என்ற அவர், அல்லு அர்ஜுனை தனக்குத் தெரியாது என்று சொன்னார்.

சொன்னதில் தவறில்லை

இதனால் ஷகிலாவின் இந்தப் பேட்டி வைரலானது. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொதித்தனர். ரசிகர்கள் கண்டபடி மோதிக்கொண்டனர். பொங்கலுக்கு ரிலீஸ் ஆன, அல்லு அர்ஜுனின் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அவரை உங்களுக்குத் தெரியவில்லையா? என்று சகட்டுமேனிக்கு அவரை விளாசித் தள்ளியுனர். இந்நிலையில் சிலர், ஷகிலாவுக்கு ஆதரவாகக் களமிறங்கினர். அதில், ஷகிலா சொன்னதில் தவறில்லை என்றும் தெரியாததை தெரியாது என்றுதான் சொல்ல முடியும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X