குக் வித் கோமாளி அஸ்வினும் நானும் எப்படி தெரியுமா... ஷகிலா மகளின் அசத்தல் பதிவு

சென்னை : தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இளம் வயதிலேயே நடிக்க வந்தவர் ஷகிலா. 90 களில் மலையாளத்தில் அடல்ட் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்கள் சூப்பர்ஹிட்டும் ஆகின. ஏ சான்றிதழ் பெற்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஷகிலாவின் புகழ், மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் புதிய படங்களின் வசூலை பாதிக்கும் அளவிற்கு இருந்தது. ஷகிலா பட ரிலீஸ் சமயத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியிட தயங்கும் நிலை இருந்தது.

 Actress Shakeelas daughter gets emotional about Cooku With Comali Ashwin

2002 ல் தான் இனி அது போன்ற படங்களில் நடிக்க போவதில்லை எனவும், குணசித்திர வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பிறகு, நீண்ட இடைவெளிக்கு பின், விஜய் டிவி.,யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் வந்தார்.

இந்த நிகழ்ச்சி ஷகிலா மீதான தோற்றத்தை முழுவதுமாக மாற்றி, தாய் உணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. தன்னுடைய சமையல் திறமையாலும் மிகவும் பாராட்டை பெற்றார். இதனால் இவர் பைனல்சிற்கு செல்வார், பட்டத்தை வெல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன், திருநங்கை பெண்ணான மில்லா என்பவரை ஷகிலா, தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவரை அழைத்து வந்து, அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

தற்போது குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள மில்லா அத்துடன், மற்றொரு தாய்க்கு பிறந்த சகோதரர் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாக்கப்பட்டு, பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X