என்னால ஓப்பனா எல்லாத்தையும் சொல்ல முடியாது.. எனக்குள்ளும் "அது" இருக்கு.. ஷகீலா!

சென்னை : ஷகீலா என்ற பெயரை உச்சரித்தவுடன் மனதுக்குள் கிளர்ச்சியும், கிளுகிளுப்பும் சேர்ந்து கொள்கிறது. பல இளம் காளையர்களின் இரவுகளை அழகாக்கிய ரதி தேவதை ஷகீலா.

திரைத்துறையில் மின்னும் பிரபலங்களின் வாழ்க்கை பெரும்பாலும் கவலையும் கண்ணீர் நிறைந்ததாகவே இருக்கும். அரிதாரத்தை பூசும் போதே தனக்குள் இருக்கும் கவலை, கண்ணீர், துயரம் என அனைத்திற்கும் அணை போட்டு விடுகிறார்கள்.

சினிமாவுக்கும், வாழ்க்கைக்கும் இடையே ஷகிலாவின் வாழ்க்கை சஞ்சலமிக்கதாவே இருந்துள்ளது. தனது கட்டுடலால், கிளர்ச்சியூட்டும் படங்களால் கட்டிப்போட்டு பலரின் மனதை கட்டி இழுந்த ஷகிலாவின் மறுபக்கம் ஓர் அலசல்

 ப்ளே கேள்ஸ்

ப்ளே கேள்ஸ்

மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படத்தின் துணை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா. பாலுணர்வு கிளர்ச்சியூட்டும் படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு புகழ் பெற்றார்.

 கொடிகட்டிப்பறந்தார்

கொடிகட்டிப்பறந்தார்

90களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப்பறந்தார் ஷகிலா. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை விட இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இதனால் பிரபல கதாநாயகர்களின் படங்கள் வெளியாவது பெரும் சவாலாக இருந்தது.

 குணசித்திர நடிகை

குணசித்திர நடிகை

மலையாள படம் என்றாலே அது ஷகிலா படம் தான் என்று பேசப்பட்டவர் ஷகிலா. கிட்டத்தட்டட 110க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆபாச படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா, குணசித்திர வேடம், நகைச்சுவை கதாபாத்திரம் என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

 வேதனை இருக்கிறது

வேதனை இருக்கிறது

ஒரு பெண்ணுடலாக மட்டுமே பார்க்கப்பட்ட ஷகிலாவின் பிம்பத்தைக் கடந்து ஒரு துயர் மிகுந்த இதயத்தை ஷகிலா தனது சுயசரிதையில், எனக்கு குற்றவுணர்வு இல்லை, ஆனால் வேதனை இருக்கிறது என, வண்ண விளக்கு வெளிச்சத்திற்கு பின்னால் இருக்கும் கனத்தை இருளை அழகாக நூலில் எழுதி இருக்கிறார்.

 சுயசரிதை படமானது

சுயசரிதை படமானது

காமகளி வேட்டை கடந்து ஒரு பெண்ணின் வாழ்க்கை துயர் பக்கங்களை பேசும் ஷகிலாவின் சுயசரிதை புத்தகம் தற்போது திரைப்படமாக வெளியாகி உள்ளது. இந்தப்படத்தை கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கி உள்ளார். படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா கதாநாயகியாக நடிக்கிறார்.

வறுமை

வறுமை

சிறுவயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து, வறுமையின் பிடியில் சிக்கி இறுதியில் குடும்பத்திற்காக காம கிளர்ச்சியூட்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். எந்த பெண்ணும் செய்யத்தயங்கும் கதாபாத்திரத்தை புன்முறுவலோடு தன் குடும்பத்திற்காக ஏற்றுக்கொண்டார். இறுதியில் குடும்பத்தினாலேயே ஒதுக்கப்பட்டார் என்பது தான் வேதனையின் உச்சம்.

 ஒளிந்து இருக்கின்றன

ஒளிந்து இருக்கின்றன

சமீபத்தில் வெளியான படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய நடிகை ஷகிலா, புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் முழுமையாக சினிமாவில் சொல்ல முடியாது . இன்னும் சொல்ல முடியாத பல வேதனைகள் மனதிற்குள் ஒளிந்து இருக்கின்றன என்றார்.

 பெண்களுக்கு ஒரு பாடம்

பெண்களுக்கு ஒரு பாடம்

கணவர், குடும்பம், குழந்தை என வாழ ஆசையாக இருந்தது. ஆனால், திருமணம் என்ற பெயராலும் சிலரால் ஏமாற்றப்பட்டேன், என்னைப்போல எந்த பெண்ணும் ஏமாந்துவிடக்கூடாது. என் படம் ஒரு பாடமாக இருக்கட்டும். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு தன் மீது அனுதாபப்பட வேண்டாம் என்றும் கூறினார்.

 கண்டோட்டம் மாறியது

கண்டோட்டம் மாறியது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஷகிலா மீதான கண்டோட்டமே மக்களுக்கு மாறிவிட்டது. ஷகிலாவை இதுவரை ஆபாச பொருளாக பார்த்த அனைத்து விழிகளும் இன்று, அவரின் உண்மை முகத்தை பார்த்து நெகிழ்ந்து ள்ளனர். தன்னை மக்கள் பார்க்கும் பார்வை மாற வேண்டும் என்ற ஷகிலாவின் குமுறல் இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைவேறி உள்ளது. இதுவரை ஆண் மட்டுமே ரசிகர்களாக இருந்த நிலையில் தற்போது பெண்களும் இவரது ரசிகையாக மாறி உள்ளனர்.

More from Filmibeat

Read more about: shakeela ஷகீலா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X