இந்த திணறு திணறுகிறாரே.. பயில்வானை பஞ்சர் ஆக்கிய ஷகிலா
சென்னை: பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை பேட்டி எடுத்த ஷகரில் பதிலளிக்க முடியாதபடி பல கேள்விகளை கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பத்திரிகையாளர் என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பலரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பேசுபவர். அவ்ர் அவ்வாறு பேசுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் அவருக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

பயில்வானை வைத்து செய்த ரேகா நாயர்
நடிகை ரேகா நாயர் குறித்து ஒருமுறை பயில்வான் ரங்கநாதன் தவறாக பேசியிருந்தார். இதனையடுத்து எப்போதும் பயில்வான் ரங்கநாதன் நடைபயிற்சி செய்யும் இடத்தில் வைத்து அவரை லாக் செய்த ரேகா நாயர், தன்னை குறித்து பேசியதற்கு ஆதாரம் இருக்கிறத?.. தன்னை குறித்து எப்படி பேசலா? என கேட்டு பயில்வான் ரங்கநாதனை கடுமையாக திட்டிய வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

தயாரிப்பாளர் கே.ராஜனிடம் சிக்கிய பயில்வான்
அதேபோல் சினிமா நிகழ்வு ஒன்றில் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் கலந்துகொண்டிருந்தார். அந்த சமயத்தில் பயில்வான் ரங்கநாதன் ஏதோ பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பயில்வான் ரங்கநாதனை தயாரிப்பாளர் ராஜன் ஒருமையில் பேசினார். இப்படி பலரிடம் பல இடங்களில் பேச்சு வாங்குபவர்தான் பயில்வான் ரங்கநாதன்

பாலாவை வம்புக்கிழுத்த பயில்வான் ரங்கநாதன்
இயக்குநர் பாலாவும் அவரது மனைவியும் பிரிந்த விஷயத்தை வைத்துக்கொண்டு தனக்கு ஏற்றவாறு பேசினார் பயில்வான் ரங்கநாதன். பாலாவுக்கு சில பழக்கங்கள் இருப்பதாலும் அது தொடர்ந்ததால்தான் அவரது மனைவி மலர் பிரிந்துவிட்டார் எனவும் வீடியோ ஒன்றில் கூறினார். ஆனால் இதற்கும் பலர் கண்டனங்களை பதிவு செய்தனர். ஒருவரது விவகாரத்து விஷயத்தை தேவையில்லாமல் எதற்கு பயில்வான் தலையிடுகிறார் எனவும் கேள்வி எழுப்பினர்.

பத்திரிகையாளர்களே பயில்வானுக்கு கண்டனம்
தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் இப்படி பேசிக்கொண்டிருப்பதால் பத்திரிகையாளர்களுக்குத்தான் அவமானம் என்று பத்திரிகை உலகை சேர்ந்தவர்களே தங்களது கண்டனத்தை வெளிப்படையாக முன்வைப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும். ஆனாலும் பயில்வான் தனது போக்கை மாற்றிக்கொள்வதாக இல்லை. தொடர்ந்து அவர் பலரது அந்தரங்க விஷயங்களை பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.

பயில்வானை பஞ்சர் ஆக்கிய ஷகிலா
இந்நிலையில் நடிகை ஷகிலா பத்திரிகையாளர் பயில்வான் ரஙக்நாதனை சமீபத்தில் பேட்டி எடுத்தார். அப்போது பயில்வானிடம் ஷகிலா, "பத்த்ரிகைகளில் படித்ததை வைத்தும், கேட்டதை வைத்தும்தான் நீங்கள் பேசுகிறீர்கள். அதற்கான ஆதாரம் எங்கே? என கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பயில்வான் நீங்கள் ஏன் மலையாளர் திரையுலகிலிருந்து வந்தீர்கள் என பதில் கேள்வி கேட்க; அதற்கு ஷகிலா என்னை யார் மலையாளத்திலிருந்து துரத்திவிட்டார்கள் என ஆதாரத்தோடு கூறுங்கள் பார்ப்போம் என அதிரடியாக கூறினார். இப்படி பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பயில்வான் ரங்கநாதனின் வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











