Shakeela - அந்த ஹீரோவின் அப்பா ஒரு டைரக்டர்.. என்னை படுக்கைக்கு கூப்பிட்டார்.. பெயரோடு போட்டுடைத்த ஷகீலா
சென்னை: Shakeela (ஷகீலா) ஹீரோவின் அப்பா ஒரு இயக்குநர். அவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என நடிகை ஷகீலா ஓபனாக பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கின்போது பேசிய விசித்திரா தெலுங்கு சினிமாவில் ஒரு டாப் ஹீரோ படத்தில் நடித்தபோது அவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குறிப்பிட்டார். அதனையடுத்து பலரும் அந்த ஹீரோ பாலகிருஷ்ணாதான் என உறுதியாக கூறிவருகின்றனர். விசித்திராவின் அந்தப் பேச்சு திரையுலகில் பெரும் புயலை ஏற்படுத்தியிருக்கிறது.

எப்போ முடிவுக்கு வரும்: அதிலும் சினிமாவில் காலங்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை விசித்திராவின் பேச்சு உணர்த்தியிருப்பதாகவும் இதற்கு எப்போதுதான் முடிவு கிடைக்குமோ என்றும் பலர் கூறினர். மேலும் விசித்திராவின் தைரியத்தையும் ஒருதரப்பினர் பாராட்ட மறுதரப்பினரோ விசித்திரா அந்த ஹீரோவின் பெயரை சொல்லியிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துவருகின்றனர். எது எப்படியோ அவர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை சொல்லியது பெரும்பாலும் பாரட்டையே பெற்றிருக்கிறது. கமல் ஹாசனும் பாராட்டு தெரிவித்திருந்தார்.
ஷகீலா பேட்டி: இந்நிலையில் நடிகை ஷகீலா இந்த விவகாரம் குறித்தும் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “விசித்திரா என்னுடைய தோழிதான். நானும் அவரும் சில படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம். அவர் பிக்பாஸ் வீட்டில் சொன்ன விஷயத்தில் அவரை பெட் ரூமுக்கு அழைத்த நடிகர் என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டும்.
இப்போது எதற்கு: முக்கியமாக இந்த சம்பவத்தால்தான் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி இருந்தவர் இப்போது எதற்கு மீடியா வெளிச்சத்துக்குள் வருகிறார். குக் வித் கோமாளி, பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது அவருக்கான விளம்பரத்தை அவர் தேடி மீண்டும் சினிமா வாய்ப்பு பெற முயற்சிக்கிறாரோ என்றே எண்ண தோன்றுகிறது.
பயமா: பெட்ரூமுக்கு அழைத்த நடிகரின் பெயரை சொல்லிவிட்டு தெலுங்கு சினிமாவில் நடிக்க சென்றால் உதைப்பார்கள் என்ற பயத்தால் அவர் நடிகரின் பெயரை சொல்லவில்லையோ என்னவோம். அதேசமயம் அவரை நான் ரொம்பவே தைரியசாலியாகத்தான் பார்க்கிறேன்.
இவர்தான் அவர்: நான் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் இப்போதும் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறேன். ஒருமுறை தெலுங்கு பட இயக்குநர் சத்யநாராயணா ராவ் என்பவர் என்னை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டார். அடுத்த படத்தில் நடிக்க சான்ஸ் தருகிறேன் என்று சொல்லிதான் கூப்பிட்டார். அதற்கு நான், சார் இந்தப் படத்தில் நடித்ததற்கு சம்பளம் வாங்கிவிட்டேன். அடுத்த படம் எனக்கு விருப்பமும் இல்லை அவசியமும் இல்லை என்று சொல்லிவிட்டேன்.
அவர் வேறு யாருமில்லை தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷின் தந்தைதான். இப்போது அவர் உயிரோடு இல்லை இறந்துவிட்டார். நான் சொன்னது குறித்து ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமே திரண்டு வந்து என்னிடம் கேட்டாலும் ஆமா அவர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டார் என்று தைரியமாக சொல்வேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











