வாழ்க்கையை கெடுக்கக்கூடாது.. மது இல்லாமல் என்னால் இரவில் தூங்க முடியாது.. ஷகிலா ஓபன் டாக்
சென்னை: Shakeela (ஷகிலா) மது இல்லாமல் தன்னால் இரவில் தூங்க முடியாது என்று நடிகை ஷகிலா தெரிவித்திருக்கிறார்.
நடிகை ஷகிலா அடல்ட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். முதன்முறையாக அவர் அறிமுகமானது சில்க் ஹீரோயினாக நடித்த படத்தில்தான். ஒருகட்டத்தில் ஷகிலாவின் வளர்ச்சியை பார்த்த பலரும் இவர்தான் சில்க் ஸ்மிதாவுக்கு போட்டி என்று ஆரூடம் கூறினர். இருந்தாலும் சில்க் மீது ஷகிலாவுக்கு எப்போதுமே ஒரு மரியாதை உண்டு என்பதை அவரே பல பேட்டிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அஞ்சிய ஹீரோக்கள்: ஷகிலாவின் மார்க்கெட் எப்படி இருந்தது என்றால்; கேரளாவில் ஷகிலாவின் படம் ரிலீஸானால் தங்களது படங்கள் அடிவாங்குமோ என்று மம்மூட்டி, மோகன் லால் உள்ளிட்டோரே அஞ்சிய காலம் ஒன்று உண்டு. அந்த அளவுக்கு ஷகிலா மீதான கிரேஸ் இருந்தது. ஆனால் என் படத்தை ஏன் ரசிகர்கள் அப்படி பார்த்தார்கள் என்று எனக்கு தெரியவே இல்லை என்பதை ஷகிலா இப்போதும் கூறிவருகிறார்.
பெரிய திரை டூ சின்னத்திரை: பெரிய திரையில் கலக்கிக்கொண்டிருந்த ஷகிலா அண்மைக்காலமாக சின்னத்திரையிலும் கலக்கிவருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதை அடுத்து அவரின் மீது குத்தப்பட்ட அத்தனை முத்திரையும் கிழித்தெறியப்பட்டது. குறிப்பாக திருநங்கை ஒருவரையும் அவர் தத்து எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி மட்டுமின்றி சில யூட்யூப் சேனல்களுக்காக அவர் பேட்டியும் எடுத்துவருகிறார். அதேபோல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். ஆனால் டைட்டில் வின்னராக முடியவில்லை. சமீபத்தில்கூட தமிழ் பிக்பாஸில் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதற்கு எதிராக காத்திரமாக குரல் எழுப்பியிருந்தார் ஷகிலா.
நோ திருமணம்: ஷகிலாவுக்கு இப்போது 49 வயது ஆகிறது. இருந்தாலும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை இந்நிலையில் தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து பேசியிருக்கிறார் ஷகிலா. அவர் பேசுகையில், “நான் செய்த தவறுகளை இல்லை என்று சொல்வதால் என்ன நடந்துவிடப்போகிறது. அதை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்தவிதமான பயமும் இல்லை.
துணை வேண்டாம்: 13 வயதிலிருந்து சம்பாதிக்கிறேன். அதன் காரணமாக இறுமாப்பு வந்துவிட்டது. எனவே இன்னொரு நபரின் துணை வேண்டாம் என்று நினைத்தேன். அனைத்துக்கும் மேலாக எனக்கு மது மற்றும் புகைப்பழக்கம் இருக்கிறது. சாதாரணமாக ஆரம்பித்த அந்தப் பழக்கம் என்னை அடிமையாக்கிவிட்டது. தினமும் மது அருந்தினால்தான் தூக்கம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்.
திருமணம் வேண்டாம்: இப்படி இந்தப் பழக்கம் இருக்கும்போது திருமணம் செய்து இன்னொருவரின் வாழ்க்கையை, மகிழ்ச்சியை கெடுத்து ஒரு திருமணம் செய்ய வேண்டுமா என்று தோன்றியது. இதனால்தான் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை” என்றார்.


Click it and Unblock the Notifications











