படப்பிடிப்பில் ஓங்கி அறைந்த சில்க் ஸ்மிதா.. ஷகிலா சொன்ன அந்த காரணம்!
சென்னை: நடிகை ஷகிலா பல கவர்ச்சிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்து இருக்கிறார்.. கவர்ச்சி படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா, தற்போது, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வரும் இவர், சில்க் ஸ்மிதா பற்றி கூறியுள்ளது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
90களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்தார் ஷகிலா. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை விட இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. ஷகிலா கிட்டத்தட்ட 110க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆபாச படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா தற்போது குணசித்திர வேடம், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஷகிலா மீதான கண்ணோட்டமே மக்களுக்கு மாறிவிட்டது. ஆரம்பத்தில் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருந்த அபிப்பிராயமும், தற்போது வைத்திருக்கும் அபிப்பிராயத்திற்கும் நூறு மடங்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. தற்போதைய தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது.
ஓங்கி அறைந்தார்: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஷகிலா, சில்க் ஸ்மிதாவை தனது பிடிக்காது என்று கூறியுள்ளார். அதில், நானும் சில்க் ஸ்மிதாவும், ஒரு படத்தில் அக்கா தங்கையாக நடித்தோம் அப்போது,சில்க் ஸ்மிதா அறைவது போன்ற காட்சி படமாக்கப்பட இருந்தது. அப்போது நான், சில்க் ஸ்மிதாவிடம் அக்கா எப்படி அடிப்பீங்க, மெதுவா அடிப்பீங்களா என்று கேட்டேன். அதற்கு சில்க் ஸ்மிதா அது ஷாட்ல வந்துடும்.. அது ஒன்னும் டென்சன் இல்ல.. அது ஈஸியா வந்துடும் என்று சொன்னாங்க.
பிடிக்கவே பிடிக்காது: ஆனால், அந்த ஷாட்டின் படப்பிடிப்பின் போது இயக்குனர் ஆக்ஷன் சொன்னதும் சில்க் ஸ்மிதா கன்னத்தில் ஓங்கி பளார் என்று உண்மையாகவே அடித்துவிட்டார். அவர் அடித்ததில் நான் அழுதே விட்டேன். அப்படி ஒரு அடி அடித்தார். அத்தனை பேர் முன்னிலையிலும் சில்க் ஸ்மிதா என்னை அடித்தது தனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அதில் இருந்து எனக்கு சில்க் ஸ்மிதா என்றாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால், அவர் இறந்த பிறகு அவரை பற்றி எனக்கு புரிகிறது அவரை போல ஒரு அழகி கிடையாது, மிகவும் திறமைசாலி என்று ஷகீலா அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











