ஏய் பயில்வான்.. உன் அம்மாவை கேவலப்படுத்த விரும்பல.. கொந்தளித்த ஷகிலா!
சென்னை: பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதனின் மகள் குறித்து, நடிகை ஷகிலா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். இது இணையத்தில் பூதாகரமாக வெடித்த நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்த போது ஷகிலாவை கெட்ட கெட்ட வார்த்தையால், திட்டி ஆபாசமாக பேசி இருந்தார். இதற்கு ஷகிலா சரியான பதில் அடிகொடுத்துள்ளார்
நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி அதன் மூலம் காசு பார்த்து வருகிறார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், காசு வந்தால் போதும் என்று பேசி வருகிறார்.

அண்மையில் அவர், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது ஷகிலா, நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயத்தை பேசித்தான் பிழக்கணுமா என்று கேட்க, கடுப்பான பயில்வான் நான் என்ன வேணும்னாலும் பேசல. நடிகர் நடிகைகள் பேட்டிகளில் சொன்னதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆதாரம் இல்லாமல் நான் எதையும் பேசவில்லை என்றார்.
ஷகிலா, பயில்வான்: இதைத் தொடர்ந்து பேசிய ஷகிலா, அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பேசும் நீங்கள் உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியுமா என்று கேட்டு, உங்க பொண்ணு இன்னொரு பொண்ணை காதலிக்கிறாங்க அது தெரியுமா என்று சொன்னதும், மிரண்டு போன பயில்வான் ரங்கநாதன் அதற்கு உங்க நாக்கு அழுகிடும் என்று சொல்லி இருந்தார். இதனால் இருவருக்கும் பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது.
மோசமான பேச்சு: இது குறித்து, விளக்கம் அளித்த பயில்வான் ரங்கநாதன், அந்த நிகழ்ச்சியில் ஷகிலா தான் என்னிடம் தேவையில்லாத வார்த்தைகளை விட்டார். ஆனால் நான் பேசிய பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் எடிட் செய்து ஒளிபரப்பினார்கள். நான் ஷகிலாவின் பொண்ணுக்கும் அவருக்கும் நடந்த சண்டையை பற்றி கேட்டேன். அப்போ அவர்கள், என்னுடைய பொண்ணை பற்றி தவறாக பேசினாங்க. நான் என்னுடைய குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்கிறேன் எனக்கு என்னுடைய மனைவி குழந்தைகள் இருக்காங்க. ஆனால் ஷகீலா அப்படி வாழ்கிறாரா? என்று ஷகிலா குறித்து ஆபாசமான கருத்துக்களை பகிர்ந்து இருந்தார்.
அம்மாவை அசிங்கப்படுத்த விரும்பல: இதற்கு பதில் அளித்துள்ள ஷகிலா, என்னை பற்றி அசிங்கமாக கெட்டவார்த்தையால் பேட்டியில் பேசி இருந்தார். அதற்கு நான் உடனே பதில் அளித்து இருப்பேன் வெளிநாட்டில் இருந்ததால், பதில் அளிக்க முடியாமல் போய்விட்டது. மற்றவர்களின் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று, எட்டிப்பார்க்கும் வேலையைத்தான் நீ பார்த்துக்கொண்டு இருக்க, ஏன்னா உனக்கு அந்த வேலை தான் தெரியும். நீ பயில்வான் ரங்கநாதன் இல்லை... நீ பயில்வான் பைத்தியகாரன். நீ சொன்ன கேவலமான வார்த்தையுடன், பையா என்று சொல்லி திட்ட எனக்கு ஐந்த நிமிஷம் ஆகாது. ஆனால், நீ செய்யும் தப்புக்காக உன் அம்மாவை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை என்று பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











