பயில்வானும் சுசித்ராவும் ஒன்னு.. இப்படி ஒரு ஈனப்பிழைப்பு தேவையா? விளாசிய ஷகிலா!

சென்னை: பயில்வான் ரங்கநாதனின் மகள், ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று நடிகை ஷகிலா கூறியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்கு விளக்கம் கொடுத்த, பயில்வான் ஷகிலாவை கெட்ட கெட்ட வார்த்தையால், திட்டி ஆபாசமாக பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஷகிலா, இப்படி ஒரு ஈனப்பிழைப்பு தேவையா? என பேட்டியில் கேட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஷகிலா மற்றும் பயில்வான் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய ஷகிலா, அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பேசும் நீங்கள் உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியுமா என்று கேட்டு, உங்க பொண்ணு இன்னொரு பெண்ணை காதலிக்கிறாங்க என்றார். இதைக்கேட்டு மிரண்டு போன பயில்வான் ரங்கநாதன் அதற்கு உங்க நாக்கு அழுகிடும் என்று சொல்லி இருந்தார். இதனால் இருவருக்கும் பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது.

Actress Shakila Slams bayilvan ranganathan and suchitra

ஆபாச பேச்சு: இது குறித்து, மற்றொரு யூடியூப் சேனலுக்கு விளக்கம் அளித்த பயில்வான் ரங்கநாதன், ஆனால் நான் பேசிய பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் எடிட் செய்து ஒளிபரப்பினார்கள். நான் ஷகிலாவின் பொண்ணுக்கும் அவருக்கும் நடந்த சண்டை பற்றி கேட்டேன். அப்போ அவர்கள், என்னுடைய பொண்ணை பற்றி தவறாக பேசினாங்க. நான் என்னுடைய குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்கிறேன் எனக்கு என்னுடைய மனைவி குழந்தைகள் இருக்காங்க. ஆனால் ஷகீலா அப்படி வாழ்கிறாரா? என்று ஷகிலா குறித்து ஆபாசமா பேசி இருந்தார்.

பயில்வான் அப்படிப்பட்டவர் இல்லை: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். சுசித்ரா பெரிய நடிகர்கள் பற்றி எல்லாம் பேசி இருக்கிறார். அது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது. அதில் பயில்வான் ரங்கநாதன், மலையாள சினிமாவிற்கு நடிகைகளை சப்ளை செய்தார் என்றெல்லாம் பேசி இருந்தார். அதே போல, எனக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார் என்று எல்லாம் பேசி இருந்தார். அது உண்மை இல்லை. பயில்வான் அப்படிப்பட்ட ஆள், இல்லை, சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது யூடியூபில் பேசிவருகிறார். அவரை மாமா பையன் என்று சொல்லுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இதுகுறித்து சுசித்ரா என்னிடம் கேட்டு இருக்கலாம்.

உனக்கு என்ன பிரச்சனை: பயில்வான் எப்படி சினிமாவை அசிங்கப்படுத்தி வருகிறாரோ, அதே போல சுசித்ராவும் சினிமாவை அசிங்கப்படுத்தி வருகிறார். அந்த நடிகர் பார்ட்டி வைப்பார், சரக்கு அடிப்பார்கள் என்று பேசி வருகிறார். அதில் சுசித்ரா கலந்து கொண்டதால் தானே பார்ட்டி நடக்கும் விஷயம் அவருக்கு தெரியும், அன்னைக்கு கலந்து கொண்டு, இன்று ஏதோ பிரச்சனை என்பதற்காக அவர்களை குறைசொல்லலாமா. சுசித்ராவிற்கும் அவரின் முன்னாள் கணவருக்கும் இருக்கும் பிரச்சனை குறித்து பொது வெளியில் அவர் தாராளமாக பேசலாம். அதைவிட்டு விட்டு, அந்த வீட்டில் அது நடக்கிறது, இது நடக்கிறது என்று ஏன் பேச வேண்டும். ஆக மொத்தம் இரண்டு பேருமே சினிமாவை கேவலப்படுத்தி வருகின்றனர்.

இப்படி ஒரு ஈனப்பிழைப்பு தேவையா?: பயில்வான் என்னை ஒரு பேட்டியில் என்னை அசிங்கமாக திட்டி, ப்ளு பிலிமில் நடித்தேன் என்று சொல்லி வருகிறார். அது ப்ளூ பிலிம் இல்ல, முதலில் அதை தெரிந்து கொண்டு பயில்வான் பேசவேண்டும். இத்தனை நாட்களாக அவரை நான் அண்ணன் என்று தான் அழைத்தேன்.இந்த பேட்டியில் தான் அவரை நீ என்று சொல்கிறேன். என்னை அசிங்கமான வார்த்தையால் சொல்லி திட்டி இருந்தார். என்னாலும் அந்த வார்த்தை சொல்லி திட்டமுடியும் ஆனால், அவரின் அம்மாவை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை.

மேலும், நான் பயில்வானின் மகள், ஒரு பெண்ணை காதலிக்கிறாள் என்று சும்மா சொல்லவில்லை. அப்படி மீடியாவில் சொல்ல முடியுமா... நான் கண்ணால் பார்த்ததைத் தான் சொன்னேன். பயில்வான் வீட்டு மாடியில் இருக்கும் தோழி ஒருவரின்வீட்டுக்கு சென்ற போதுதான், பயில்வான் மகளை பார்த்தேன், நான் ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அவர் தான் மற்றவர்களை பற்றி பேசி பிழைப்பு நடத்தி வருகிறார்.. இப்படி ஒரு ஈனப்பிழைப்பு தேவையா? என்று ஷகிலா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X