ஷகிலாவின் மகளை கழட்டி விட்ட பிக்பாஸ் டீம்… வருத்தத்தில் மிலா !

சென்னை : சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ், தற்போது ஐந்தாவது சீசனை வெற்றிகரமாக தொடங்கி உள்ளது.

கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷகிலாவின் மகள் மிலாவை நைசாக கழட்டி விட்டு நமிதா மாரிமுத்துவை வீட்டிற்குள் அனுப்பி உள்ளது.

சுவாரசியம்

சுவாரசியம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில், யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்கிறார்கள், என்ன மாதிரியான போட்டிகள் நடக்கும் என்பது வரை பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நாள் முழுவதும் டிரெண்ட் ஆகும். அது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும், தினசரி வெளியிடப்படும் ப்ரோமோவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பார்கள். பிடித்த போட்டியாளர்களுக்கு ஆர்மி உருவாக்குவது என பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் கொண்டாட்டமாக இருக்கும்.

கம்பி கட்டும் கதை

கம்பி கட்டும் கதை

பிக் பாஸ் சீசன் 5க்கான செட்டு போட ஆரம்பிச்சவுடனே இவங்க வராங்க... அவங்க வராங்க என்று போட்டியாளர்கள் குறித்த தகவல் வேகமாகப பரவின. இதில், குக் வித் கோமாளியில் பங்கேற்ற கனி, சுனிதா, பாபா பாஸ்கர், ஷகிலாவின் மகள் மிலா, நிழல்கள் ரவி மற்றும் ஷாலு ஷம்மு என பலரது பெயர்கள் அடிபட்டது. ஆனால்,பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தான் தெரிஞ்சது யூகமா வந்த ஒருவரும் நிகழ்ச்சிக்கு வரல... வழக்கம் போல இதுவும் கம்பி கட்டுற கத என்று.

18 போட்டியாளர்கள்

18 போட்டியாளர்கள்

தற்போது பிக் பாஸ் இல்லத்தில் 7 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக அனைவரும் புதுமுகங்கள்.

ப்ளீஸ் கேட்காதீங்க

ப்ளீஸ் கேட்காதீங்க

ஷகிலாவின் மகள் மிலா பிக் பாஸ் கேமராவுக்கு முத்தம் கொடுப்பது போல இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்ததால், இதையடுத்து மிலா நிச்சயம் பிக் பாஸ் இல்லத்தில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இடம் பெறவில்லை, இதுகுறித்து மிலாவிடம் கேட்ட போது, பிக் பாஸ் பற்றி மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ் என்று வருத்தத்துடன் கூறினார்.

Recommended Video

Shakila Daughter Mila Got Emotional | அம்மா 'Love You' | Cook With comali
நமீதா மாரிமுத்து திறமைசாமி

நமீதா மாரிமுத்து திறமைசாமி

மிலாவை விட நமிதா மாரிமுத்து திறமைசாலியாக இருந்ததால், நமிதா மாரிமுத்துவை பிக்பாஸ் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும், நமிதா மாரிமுத்து கடந்த 2014ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் 2015 மிஸ் கூவாகம், 2018 மிஸ் இந்தியா போன்றவை வென்றுள்ளார். இதனால் பிக் பாஸ் டீம் மிலாவை நைசாக கழட்டி விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X