சுந்தர்.சியின் 'அரண்மனை 3' படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின்.. இவருக்கு என்ன கேரக்டருன்னு தெரியலையே?
சென்னை: சுந்தர்.சி.யின் அரண்மனை 3 படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் நடிக்க இருக்கிறார்.
சுந்தர் சி இயக்கத்தில், வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அரண்மனை.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் சுந்தர்.சியும் நடித்திருந்தார். பேய் படமான இது, கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது.

அவ்னி சினிமேக்ஸ்
அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார். இதில், த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் பேசப்பட்டது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த இரண்டு படங்களையும் சுந்தர்.சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

மூன்றாம் பாகம்
இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்தை சுந்தர். சி இயக்கி, நடிக்க உள்ளார். இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக, ராஷி கண்ணா நடிக்கிறார். இவர் தமிழில், அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்தவர். இன்னும் இரண்டு ஹீரோயினும் ஒரு முன்னணி ஹீரோவும் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. பின்னர் முதல் பாகத்தில் நடித்த ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார்.

சாக்ஷி அகர்வால்
'மற்றொரு ஹீரோயினிடம் பேசி வருகிறோம். விவேக், யோகிபாபு உட்பட பலர் நடிக்க உள்ளனர்' என்று படக்குழுத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். தமிழில் சில படங்களில் நடித்துள்ள சாக்ஷி, இப்போது சின்ட்ரெல்லா, டெடி படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சாக்ஷி பிரபலமாகியுள்ளார். இதையடுத்து அவரை இதில் நடிக்க வைத்துள்ளனர்.

காமெடிக்கு
'ராஷி கண்ணா, சாக்ஷி நடிப்பது உறுதியாகிவிட்டது. மற்றவர்களிடம் பேசிவருகிறோம்.
படப்பிடிப்பு மார்ச் மாதக் கடைசியில் தொடங்க உள்ளது. அதற்கான வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் பேய் படம். முந்தைய பாகத்துக்கும் மூன்றாம் பாகத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.
Recommended Video

ஆர்வமாக இருக்கிறேன்
இதில் நடிப்பது பற்றி நடிகை ராஷி கண்ணா கூறும்போது, 'அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களை பார்த்திருக்கிறேன். இதுபோன்ற ஒரு கதையில் நடிக்க எனக்கு ஆசை இருந்தது. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











