திரௌபதி இசையை பாராட்டிய ஷாலினி.. சீக்கிரம் தல படத்துக்கும் மியூஸிக் போடுங்க.. ஜுபின் செம்ம ஹேப்பி!

சென்னை: திரௌபதி படத்தை பார்த்த நடிகை ஷாலினி இசையமைப்பாளர் ஜுபினை பாராட்டியிருக்கிறார்.

Recommended Video

DRAUPATHI MOVIE REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL

திரௌபதி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்தை வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குநர் மோகன் இயக்கியுள்ளார்.

திரௌபதி படம் கிரவுட் ஃபன்டிங் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜுபின் இசையமைத்துள்ளார்.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

திரௌபதி படத்தில் நடிகை ஷாலினியின் அண்ணன் ரிச்சர்டு ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை ஷீலா ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தில் இரு சமூகம் சார்ந்த நாடகக்காதல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இதனால் சில சமுதாயத்தை சேர்ந்த மக்களின் மத்தியில் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தியேட்டர் அதிகரிப்பு

தியேட்டர் அதிகரிப்பு

குடும்பம் குடும்பமாகவும் கூட்டம் கூட்டமாகவும் சென்று படத்தை பார்த்து வருகின்றனர். படம் ரிலீஸான முதல் நாளிலேயே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. இதனால் இரண்டாம் நாளில் படம் திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

ஜுபினை பாராட்டிய ஷாலினி

ஜுபினை பாராட்டிய ஷாலினி

இந்நிலையில் நடிகை ஷாலினி அஜித் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் நேற்று திரௌபதி படத்தை பார்த்தார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது படத்தின் இசையை ரசித்த அவர் இசையமைப்பாளர் ஜுபினிடம் அதுகுறித்து பேசி அவரை பாராட்டி இருக்கிறார்.

தேங்க் யூ மேடம்

இதனை ஜுபின், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, திரௌபதி படத்தின் இசையை ஷாலினி மேடம் வெகுவாக பாராட்டி என்னிடம் பேசிய போது...என ஷாலினி பேசும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். மேலும் தேங்க் யூ ஷாலினி மேடம் என்று பதிவிட்டுள்ளார்.

நல்லா இருந்துச்சு

ஜுபினின் இந்த டிவிட்டை பார்த்த அஜித் ரசிகர்கள், அவரின் இசையை பாராட்டியிருக்கின்றனர். மேலும் அஜித்தின் படத்திற்கும் இசையமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உண்மையாவே உங்க பங்களிப்பு ரொம்ப முக்கியமானது.. நல்லா இருந்துச்சு.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

விரைவில் தல படத்திற்கு

தரமான இசை சார் அருமை அருமை அண்ணா வேற லெவல்
அண்ணா என்று பாராட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
விரைவில் தல படத்திற்கும் இசையமைக்க வாழ்த்துக்கள் அண்ணா என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். இந்த ரசிகர் சூப்பர்.. விரைவில் தல படத்திற்கு இசை அமைக்க வாழ்த்துக்கள்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X