ஸ்பெயினில் மகளுடன் சுற்றிப் பார்க்க வந்த ஷாலினி.. அஜித்தை டிஸ்டர்ப் பண்றதில்லையாம்!

சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் தற்போது ஸ்பெயினில் நடந்து வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், ஜப்பானில் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் அங்கு நிலவும் காலச்சூழல் சூட்டிங்கிற்கு சரியாக வராது என்பதால் ஸ்பெயினுக்கு சூட்டிங் ஸ்பாட் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது ஸ்பெயினின் பல இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக படத்தில் அஜித்தின் கெட்டப் போஸ்டர்கள் வெளியான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலும் இரு போஸ்டர்கள் வெளியாகின. இதனிடையே இந்த சூட்டிங்கில அஜித்துடன் ஷாலினி மற்றும் அனௌஷ்கா, ஆத்விக் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

ajithkumar shalini ajith good bad ugly movie

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே முன்னதாகவே பொங்கல் ரிலீஸ் என அறிவித்துவிட்டு சூட்டிங்கை துவங்கிய குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகவுள்ளதாகவும் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டமாக மே மாதத்தில் படம் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் குட் பேட் அக்லி படம்தான் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாகவும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி பட சூட்டிங்: இதனிடையே தற்போது குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கிற்காக ஸ்பெயினில் படக்குழுவினர் உள்ளனர். நடிகர் விஜய்யும் தன்னுடைய குடும்பத்தினருடன் இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக ஸ்பெயின் சென்றுள்ளார். அடுத்தடுத்த படத்தின் சூட்டிங்குகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், அஜித்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி அவரது புதிய லுக்கையும் வெளிப்படுத்தியுள்ளது. இரண்டு வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் இந்தப் புகைப்படங்களில் அஜித் காணப்படுகிறார். இதனிடையே அஜித்துடன் ஸ்பெயின் சென்றுள்ள ஷாலினி, அஜித்துடனும் தன்னுடைய மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவுடனும் அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

ஸ்பெயினில் ஜாலி ட்ரிப்: கடந்த இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய காதல் கணவருடன் ஸ்பெயினில் ஜாலியாக நடைபோட்ட ஷாலினி, அடுத்ததாக குட்டித்தல என்று பாராட்டப்படும் தன்னுடைய மகன் ஆத்விக்குடன் சுற்றிவந்தார். இதனிடையே நேற்றைய தினம் மீண்டும் அஜித்துடன் தான் இருக்கும்படியான புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தல பிரின்சஸ் அனோஷ்காவுடன் பிரபல சுற்றுலா தலத்தை சுற்றிப் பார்க்கும் வீடியோவை ஷாலினி பகிர்ந்துள்ளார்.

தல பிரின்சஸ் அனோஷ்கா: அனோஷ்கா எப்போதுமே ரசிகர்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். அஜித்தின் அழகில் பாதி, ஷாலினியின் அழகில் மீதியாக ஹீரோயின் மெட்டீரியலாக வலம்வந்துக் கொண்டிருக்கும் இவர், தற்போது ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் அஜித் பிசியாக நடித்துவரும் நிலையில், அவரை அதிகமாக டிஸ்டர்ப் செய்யாமல் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் ஸ்பெயினை சுற்றி வருகிறார் ஷாலினி. அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அஜித்துடனும் நேரத்தை செலவழித்து வருகிறார். இவர்களின் அழகான இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X