Divorce Photoshoot - விவாகரத்து பெற்ற நடிகை நடத்திய போட்டோஷூட் - இணையத்தை அதிர வைத்த நிகழ்வு

சென்னை: Divorce Photoshoot (விவாகரத்து போட்டோஷூட்) சின்னத்திரை நடிகை ஷாலினி என்பவர் விவாகரத்து பெற்றதை அடுத்து ஃபோட்டோ ஷூட் நடத்தினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

சின்னத்திரை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று தனியான இடத்தை பிடித்தார். சீரியலில் மட்டுமின்றி சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர். நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் தனது திறமையை நிரூபித்தவர் ஷாலினி.

actress Shalini did a photo shoot after her divorce

ரியாலிட்டி ஷோவில் ஷாலினி: சமீபத்தில்கூட ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய மகள் ரியாவுடன் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் இரண்டு பேருக்கும் இடையே இருந்த அன்யோன்யத்தை பார்த்த ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். இதற்கிடையே, ஷாலினிக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்து முடிந்தது.

முதல் விவாகரத்து: திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டு இரண்டு பேரும் பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு சிங்கிளாக இருந்த ஷாலினிக்கு ரியாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஷாலினியின் ரசிகர் என கூறி ரியாஸ் பழகியதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தாங்கள் காதலிப்பதாக வெளிப்படையாக ஷாலினியும் அறிவித்தார்.

இரண்டு பேருக்கும் இரண்டாவது திருமணம்: ஷாலினிக்கு ஏற்கனவே விவாகரத்து ஆனது போல் ரியாஸுக்கும் விவாகரத்து நடந்திருப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும் இரண்டும் பேரும் திருமணம் செய்துகொண்டனர். இதனை அடுத்து இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தாள். சுமூகமாக அவர்களது திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. ஆனால், ரியாஸ் தன்னை பலமுறை அடித்து துன்புறுத்தியதாக ஷாலினி கூறியிருந்தார்.

actress Shalini did a photo shoot after her divorce

விவாகரத்து பெற்ற ஷாலினி: தன்னை அடிப்பதோடு மட்டுமின்றி ரியாஸுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து விவாகரத்து மனு தாக்கல் செய்தார் ஷாலினி. தற்போது அவருக்கு விவாகரத்தும் கிடைத்திருக்கிறது. இதனை போட்டோ ஷூட் நடத்தி ஷாலினி சமூக வலைதளங்களில் பதிவிட்டு அறிவித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ஷாலினியின் போட்டோஷூட்: அந்த போட்டோ ஷூட்டில் திருமணம் ஆன புதிதில் ரியாஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கிழிப்பது போலவும், கணவரின் புகைப்படத்தை காலில் போட்டு மிதிப்பது போலவும் போஸ் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி கையில் ஒரு கறுப்பு பலகையை ஏந்தியிருக்கிறார். அந்த பலகையில், எனக்கு 99 பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் கணவர் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது.

actress Shalini did a photo shoot after her divorce

விமர்சனம்: இதனை பார்த்த நெட்டிசன்களில் பலர் ஷாலினி இவ்வாறு செய்திருக்கக்கூடாது ஒரு பிரிவு அவரது தனிப்பட்ட உரிமையை சார்ந்ததுதான் ஆனால் இந்த அளவுக்கு வன்மத்தோடு அதை வெளிப்படுத்தியிருக்க வேண்டாம் என ஒரு தரப்பினர் விமர்சனத்தையும், இதுபோன்று விவாகரத்தை தைரியமாக வெளியில் பெண்கள் சொல்வது ஆரோக்கியமான ஒன்று என ஒரு தரப்பினர் ஆதரவையும் தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X