அஜித்துடன் ஷாலினி பகிர்ந்த குடும்ப புகைப்படங்கள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை : நடிகர் அஜித்தின் நடிப்பில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியான துணிவு படம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

இதையடுத்து அவரது ஏகே62 படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளார். இதன் சூட்டிங் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறார். அவர் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் அடுத்தடுத்த மூன்று படங்களில் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் இணைந்து நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. குறிப்பாக கடந்த ஜனவரியில் பொங்கலையொட்டி ரிலீசான துணிவு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் வசூல் 300 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏகே 62 பட அறிவிப்பு?

ஏகே 62 பட அறிவிப்பு?

இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே62 படத்தின் அறிவிப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

விரைவில் சூட்டிங்

விரைவில் சூட்டிங்

விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் முறையாக சரிபார்த்துவிட்டு சூட்டிங் போக அஜித் விரும்புவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தில் நீண்ட தாடியுடன் காணப்பட்ட அஜித், தற்போது தன்னுடைய தாடியை அழகாக ட்ரிம் செய்துவிட்டு க்யூட்டாக காணப்படுகிறார். சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுலாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவர், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

அஜித் குடும்ப புகைப்படங்கள்

அஜித் குடும்ப புகைப்படங்கள்

இந்நிலையில் தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் அஜித், ஷாலினி மற்றும் அவர்களது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்கும் காணப்படுகின்றனர். இதில் அனோஷ்கா, ஷாலினி அளவிற்கு வளர்ந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிறப்பான லுக்கில் அஜித்

சிறப்பான லுக்கில் அஜித்

ஏகே 62 படத்திற்காக அஜித் ஒருபுறம் சிறப்பாக ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் தயாராகியுள்ள நிலையில், சிறப்பான ஸ்க்ரிப்ட்டுடன் மகிழ் திருமேனியும் ஒருபுறம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாத இறுதியில் துவங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல படத்தில் ஆர்யாவை வில்லனாக்கவும் காஜல் அகர்வாலை நாயகியாக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படி இருந்தபோதிலும் முறையான அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X