இதயத்தை கயிறுகட்டி இழுத்தவன் இவனோ.. அஜித்துடன் ரொமான்ஸ் மோடில் ஷாலினி!

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி படத்திற்காக வெளிநாட்டில் சூட்டிங்கில் உள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் முன்னதாக சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடுகளில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி அஜித்தின் அடுத்தடுத்த சூட்டிங்ஸ்டாட் புகைப்படங்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்தப் புகைப்படங்களில் அடுத்தடுத்த கெட்டப்புகளில் அஜித் காணப்படுகிறார். இதனிடையே அஜித்துடன் ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக் இருவரும் சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ajithkumar good bad ugly movie shalini ajith

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகிவருகின்றன. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுததப்படமான குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படமும் 2025 பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ஸ்பெயினில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இதையொட்டி அடுத்தடுத்த அஜித்தின் கெட்டப்பில் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

குட் பேட் அக்லி படம்: முன்னதாக இந்தப்படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை இயக்கிவருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். முன்னதாக அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் இவர் நடிகராக இணைந்திருந்த நிலையில், தற்போது ஃபேன் பாய் சம்பவம் செய்ய குட் பேட் அக்லி படத்தில் இயக்குநராக இணைந்துள்ளார். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில், படம் சிறப்பான சம்பவம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது சூட்டிங்கிற்காக அஜித் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவருடன் அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

ஷாலினி அஜித் பதிவுகள்: இதையொட்டி கடந்த சில தினங்களாக அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை தன்னுடைய கணவருடனும் மகனுடனும் அடுத்தடுத்து ஷாலினி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். வெனிஸ் நகரில் தன்னுடைய மகனுடன் இணைந்து நடந்து செல்லும்படியான வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். கால்பந்தாட்டத்தில் ஆத்விக் சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், அங்கேயும் தன்னுடைய அந்த ஆர்வத்தை அவர் இந்த வீடியோ மூலம் வெளிப்படுத்தினார். முன்னதாக அஜித்துடனும் வெனிஸ் நகரில் சுற்றித் திரிந்தார். இந்த வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

அஜித் -ஷாலினி புதிய புகைப்படம்: இதனிடையே தற்போது அஜித்துடன் தான் இருக்கும் அழகான புகைப்படத்தை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். Just love, just us என்ற கேப்ஷனுடன் அஜித் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தில் தற்போதுதான் காதல் தேசத்திற்குள் புகுந்த காதலர்களை போல இவர்கள் காணப்படுகின்றனர். முன்னதாக படத்தின் கெட்டப்பாக வெளியான லுக்குடன் இந்தப் படத்தில் அஜித் காணப்படுகிறார். பழங்காலத்து கட்டத்தின் முன்பு இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X