Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க காம்ப்ரமைஸ் செய்யணும்.. நடிகை ஷாலு ஷம்மு பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை: பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க சமரசம் செய்யப்பட வேண்டியுள்ளதாக பிரபல தமிழ் நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. தொடர்ந்து சகலகலா வல்லவன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

பெரும் பரபரப்பு
இதனால் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார். ஷாலு ஷம்மு சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை ஷாலு ஷம்மு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று கோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காம்ப்ரமைஸ் செய்யாவிட்டால்
அதாவது, பெரிய நடிகரின் படத்தில் நடிக்க காம்ப்ரமைஸ் செய்துகொள்ள தவறினால், நடிகையின் திறமைகள் நிராகரிக்கப்படுகிறது. எங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் ஒரு போதும் காம்ப்ரமைஸ் செய்யமாட்டோம்" என குறிப்பிட்டுள்ளார்.

படுக்கைக்கு அழைத்தார்
இதனை பார்த்த ரசிகர்கள் யார் அந்த பெரிய நடிகர் என்று கேட்டு வருகின்றனர். நடிகை ஷாலு ஷம்மு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் மீடூவால் பாதிக்கப்பட்டதாகவும், விஜய்தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

பாடகி சின்மயி
இந்நிலையில் பெரிய ஹீரோவின் படத்தில் நடிக்க தன்னை காம்ப்ரைமைஸ் செய்ய சொன்னதாக அவர் கூறியிருக்கும் புகார் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே பாடகி சின்மயி, நடிகை அணுஷ்கா உட்பட பல பிரபலங்கள் தாங்களும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி அதிர வைத்தனர்.

ஓய்ந்திருந்த நிலையில்
மீடூ ஹேஷ்டேக் மூலம் ஹாலிவுட் முதல் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை புகார்களை கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீடூ சர்ச்சைகள் சற்று ஓய்ந்திருந்த நிலையில் ஷாலு ஷம்மு கூறியிருக்கும் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.