For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அவ்ளோ சொன்னேனே அவரைப்பத்தி.. இப்படி செய்வாய் என்று தெரிந்திருந்தால்.. ஷாலு ஷம்மு பகீர் தகவல்!

  |

  சென்னை: நடிகை சித்ரா மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகை ஷாலு ஷம்முவின் பதிவு பகீர் கிளப்பியுள்ளது.

  Chitra கணவர் போகாத pub இல்லை.. தோழி பரபர புகார் | Tamil Filmibeat

  மக்கள் தொலைக்காட்சியில் விஜேவாக பணியை தொடங்கியவர் நடிகை சித்ரா. தொடர்ந்து சன் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் ஆங்கராக பணியாற்றினார்.

  விலகுமா மர்மம்.. அறைக்கு வந்தவர்கள் யார்? ஹோட்டல் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீஸ்!

  தொடர்ந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

  முடிந்த பதிவு திருமணம்

  முடிந்த பதிவு திருமணம்

  இதனால் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றார் சித்ரா. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது காதலரான தொழிலதிபர் ஹேம்நாத்தை பெற்றோர் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்தார் சித்ரா. அடுத்த மாதம் விமர்சையாக திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

  தூக்கில் தொங்கிய சித்ரா

  தூக்கில் தொங்கிய சித்ரா

  இந்நிலையில் கணவர் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சனையால், சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் கணவருடன் தங்கியிருந்தார். நேற்று இரவு ஷுட்டிங்கை முடித்துவிட்டு அதிகாலை 2.30 மணிக்கு அறைக்கு வந்த சித்ரா, காலை 5 மணிக்கு அறையில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார்.

  கணவர் சொன்ன கதை

  கணவர் சொன்ன கதை

  உடலை கைப்பற்றிய போலீசார், உடனிருந்த கணவர் ஹேம்நாத்திடம் விசாரித்ததில் குளிக்கப்போவதாக கூறி என்னை வெளியே அனுப்பினார் சித்ரா. நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் கதவை தட்டினேன். திறக்காததால் ஹோட்டல் ஊழியர்களை அழைத்து மாற்றுச்சாவி மூலம் திறந்தேன் என்றார்.

  கழுத்தில் காயம் இல்லை

  கழுத்தில் காயம் இல்லை

  ஆனால் சித்ராவின் முகத்தில் இருந்த காயங்களும் நகக்கீரல்களும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தூக்குப்போட்டு இறந்திருந்தால் கழுத்தில் காயம் இருக்க வேண்டும். ஆனால் கழுத்தில் எந்த காயமும் இல்லை என்பதும் சந்தேகத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

  ஷாலு ஷம்மு பதிவு

  ஷாலு ஷம்மு பதிவு

  இதனால் இரண்டாவது நாளாக ஹேம்நாத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு சித்ரா மரணம் குறித்து பதிவிட்டுள்ள கருத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தவறான லைஃப் பார்ட்னர்

  தவறான லைஃப் பார்ட்னர்

  மரணமடைந்த நடிகை சித்ராவின் நெருங்கிய தோழியான ஷாலு ஷம்மு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, நான் உன்னை இப்படி இழந்து விடுவேன் என்று ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கடைசியாக நான் உன்னிடம் பேசும் போது உன் லைஃப் பார்ட்னர் விஷயத்தில் நீ தவறான முடிவை எடுத்துவிடக் கூடாது என்று கூற முயற்சித்தேன்

  இதயம் நொறுங்கிவிட்டது

  இதயம் நொறுங்கிவிட்டது

  ஆனால் நீ நான் சொல்வதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

  நீ இப்படி செய்வாய் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் என் முயற்சியை கை விட்டிருக்க மாட்டேன். நீ இப்படி செய்ததால் எங்களில் இதயம் நொறுங்கிவிட்டது என கண்ணீருடன் கதறி கலங்க வைத்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

  சித்ராவுக்கும் தெரியும்

  சித்ராவுக்கும் தெரியும்

  ஏற்கனவே சித்ராவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான ரேகா நாயர், ஹேம்நாத் எல்லா கிளப்புகளுக்கும் எல்லா பப்புகளுக்கும் செல்வார். அவர் நல்ல மனிதரே கிடையாது. இந்த விஷயம் சித்ராவுக்கு நன்றாக தெரியும். ஆனால் இவரை காதலித்து திருமணம் செய்தது ஏன் என தெரியவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Actress Shalu Shammu post about Chithra goes viral on social media. Shalu Shammu says she tried to convince Chithra on her life partner decision.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X