நீச்சல் உடையில் ஷாலு ஷம்மு... இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைக்காததால், வேறு வழியில்லாமல், நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட குளியல் வீடியோவை ஒன்றை நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் நடன வீடியோக்கள் என வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார் ஷாலு சம்மு. தொடர்ந்து கதாநாயகிகளின் தோழி கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் எனோ இந்த பொண்ணு கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாய் வைத்துள்ளார். அது போதாதென்று ஆண் நண்பர்களுடன் இணைந்து நடனமாடும் வீடியோக்களையும் வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட குளியல் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது ஒரு பக்கம் ரசிகர்களின் கிளர்ச்சியை தூண்டினாலும் பலர் இதை பார்த்து முகம் சுளிக்கவும் செய்கிறார்கள். இப்படி அடிக்கடி சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்வதால் இவருக்கென்று ரசிகர் கூட்டம் அலைமோதுகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் கிராமத்து குடும்பப் பாங்கான அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்தாலும், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை ஒரு பொழுது போக்காக வைத்துள்ளார். தற்போது வெளியான சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஷாலு ஷம்மு நடித்திருந்தார்.
அதன் பின்பு, இவருக்கு படங்களில் நடிப்பதற்கு சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3ல் பங்குபெற வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. இருந்த போதும், எல்லா நடிகைகளும் வாய்ப்புக்காக ஃபோட்டோ ஷூட் நடத்துவது போல், இவர் கவர்ச்சி வீடியோக்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பொழுதை கழித்து வருகிறார்.
நாகர்கோவிலில் பிறந்து, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த பெண்ணான ஷாலு ஷம்மு நம் தமிழ் பெண்களின் நிறத்தில் இருப்பதால் நல்ல பட வாய்ப்புகள் அமைகின்றன. நேரில் பார்க்கும் போது மாடர்ன் பெண் தோற்றத்தில் இருக்கிறார்.
படங்களில் கவர்ச்சி தேவைப்பட்டால் அதில் தவறில்லை ஆனால் பப்ளிசிட்டிகாக இப்படி செய்வது என்பது வரவேற்கத்தக்கது அல்ல. அவருக்கு இருக்கும் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தினால் நல்ல வாய்ப்புகள் பெற வாய்ப்புள்ளது. இதுவே தொடர்ந்தால் அவரை கவர்ச்சிக்கு மட்டுமே என்று முத்திரை குத்திவிடும் திரையுலகம்.


Click it and Unblock the Notifications











