நிர்வாண போட்டோவை போட்டு விளையாடிய டிவி சேனல்.. அப்செட்டாகி வெளியேறிய நடிகை.. மீண்டும் வந்தாரா?

சென்னை: நடிகை ஷாலு ஷம்மு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து கோபத்தில் பாதியிலேயே கிளம்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Shalu Shammu walks out from reality Show | Comedy Killadis

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்தார். அதே படத்தில் நடிகர் சூரியுடனும் ஜோடி சேர்ந்தார்.

அதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடிகர் சதிஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதேபோல் அஞ்சலிக்கு தோழியாக நடித்துள்ளார்.

அதிகரிக்கும் கவர்ச்சி

அதிகரிக்கும் கவர்ச்சி

தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார். பிகினி, உள்ளாடைகள் என அரைகுறை ஆடையில் அவர் காட்டும் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காமெடி கேங்ஸ்டர்

காமெடி கேங்ஸ்டர்

அண்மையில் முழு நிர்வாணமாக வெறும் ரோஜா பூக்களை கொண்டு அந்தரங்க பாகங்களை மறைத்து படு கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டிருந்தார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கேங்ஸ்டர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் ஷாலு ஷம்மு.

டீசன்ட்டான போட்டோக்கள்

டீசன்ட்டான போட்டோக்கள்

அதில் ஒரு செக்மென்ட்டில் விருந்தினரின் போட்டோக்கள் அங்குள்ள ஸ்கீரினில் ஒளிபரப்பப்படும். அதனை பார்த்து போட்டியாளர்கள் அப்படியே போஸ் கொடுப்பார்கள். இந்நிலையில் ஷாலு ஷம்மு பங்கேற்ற நிகழ்ச்சியிலும் அவரது போட்டோக்கள் பயன்படுத்தப்பட்டன. முதலில் டீசன்ட்டான போட்டோக்கள் பயன்படுத்தப்பட்டது. அதனை ரசித்தார் ஷாலு ஷம்மு.

கோபமான ஷாலு ஷம்மு

கோபமான ஷாலு ஷம்மு

பின்னர் அவர் நிர்வாண கோலத்தில் இருந்த போட்டோக்கள் அங்குள்ள ஸ்கிரீனில் ஒளிபரப்பப்பட்டது. இதனை பார்த்த ஷாலு ஷம்மு கடுப்பானார். இந்த போட்டோவை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? இது தேவையில்லாதது, ஒரு நடிகையை கூட்டி வந்து இப்படியா அசிங்கப்படுத்துவது என விளாசியப்படி மேடையை விட்டு இறங்கி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இன்று தெரியும்

இன்று தெரியும்

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி குழுவினர் ஷாலு ஷம்முவை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினர். இந்த புரமோ நேற்று வெளியானது. புரமோவை பார்த்த மக்கள் என்ன ஆனதோ ஏதானதோ? ஷாலு ஷம்மு மீண்டும் பங்கேற்றாரா இல்லை அப்படியே கிளம்பி போய்விட்டாரா என்ற எதிர்ப்பார்ப்பிலேயே நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமாய் இருந்தனர்.

மீண்டும் வந்த ஷாலு

மீண்டும் வந்த ஷாலு

இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி இன்று பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பானது. இதில், நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அமைதியாக இருக்க, அரங்கமே நிசப்தமாய் இருந்தது. மீண்டும் மேடைக்கு வந்தார் ஷாலு ஷம்மு. சிரித்தப்படியே மைக்கை வாங்கிய அவர் எல்லாம் பிராங்க் என்று கூறி சிரித்தார்

உங்களுக்குதான் தெரியுமா?

உங்களுக்குதான் தெரியுமா?

உங்களுக்கு தான் பிராங்க் பண்ண தெரியுமா எங்களுக்கும் தெரியும் என்றும் யூட்யூப்பில் செய்யாததையா நாங்கள் செய்து விட்டோம் என்றார். தான் ஒரு போட்டோவை போட்டால் அத்தனை கமென்ட்ஸை போடுவதோடு, தன்னை அத்தனை விதத்தில் ட்ரோல் செய்கிறார்கள் என்றும் கூறி அலற விட்டார்.

நம்பிட்டோம்..

நம்பிட்டோம்..

அவரை மீண்டும் மேடையில் பார்த்தப் பிறகே ரசிகர்கள் நிம்மதி பெரு மூச்சு வீட்டனர். உண்மையிலேயே ஷாலு ஷம்மு கோபித்துக் கொண்டு சென்றதாக நினைத்து விட்டதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். நல்லாவே பிராங்க் செய்தீர்கள் என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறினார். டி ஆர் பிக்காக என்னவெல்லாம் பண்றாய்ங்கய்யா..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X