Shalu shamu : இனி யாரையும் நம்பமாட்டேன்.. நொந்து போன ஷாலு ஷம்மு .. நடந்தது என்ன?
சென்னை : நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்துடன் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு, அதன் பின் பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஷாலு ஷம்மு சினிமாவில் பிரபலமானதை விட இன்ஸ்டாவில் விதவிதமான போட்டோவை போட்டு இன்ஸ்டா குயினாகவே மாறிவிட்டார்.

ஐபோன் காணவில்லை : நடிகை ஷாலு ஷம்மு தனது விலை உயர்ந்த ஐபோனை காணவில்லை என கடந்த வாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த ஐபோனை இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கியதாகவும், கடந்த 9ந் தேதி சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்த இரவு பார்ட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டு விட்டு இரவு தோழி வீட்டில் தங்கிவிட்டேன்.

நண்பர்கள் மீது சந்தேகம் : மறுநாள் காலை தான், செல்போன் காணாமல் போனது தனக்கு தெரிந்ததாகவும், உடனே பார்ட்டி நடந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தேடி பார்த்தேன், அந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடம் ஐபோன் தொலைந்த விஷயத்தை கூறி விசாரித்தேன். எவ்வளவு தேடிப்பார்த்தும் செல் போன் கிடைக்காததால் பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், செல்போன் காணாமல் போனதில் நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
பார்சலில் வந்த ஐபோன் : ஷாலு அளித்த புகாரைத் தொடர்ந்து, நைட் பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், நடிகை ஷாலு ஷம்மு நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐ போனுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, அனைவருக்கும் ஈத் முபாரக் என்று பதிவிட்டு, இந்த நாளில் நான் எனது ஐபோனை மீட்டெடுத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இனி யாரையும் நம்பமாட்டேன் : அதில், நேற்று மதியம் என் வீட்டுக்கு டன்சோவில் இருந்து ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் காணாமல் போனதாக என் ஐபோன் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நான் யார் மீது சந்தேகப்பட்டேனோ அவர் தான் என் ஐபோனை திருடி உள்ளார். என் எட்டு வருட நட்பு வீணாகி விட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு யாரை நம்புவது என்றே தெரியவில்லை, இனி யாரையும் நம்பமாட்டேன் என்று ஷாலு ஷம்மு வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்


Click it and Unblock the Notifications











